அனாதைகளை ஆதரிக்க வேண்டும் - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, 4 January 2018

அனாதைகளை ஆதரிக்க வேண்டும்

Related image
அனாதைகளை ஆதரிக்க வேண்டும்
( أَنَا وَكَافِلُ الْيَتِيمِ فِي الْجَنَّةِ هَكَذَا وَأَشَارَ بِالسَّبَّابَةِ وَالْوُسْطَى وَفَرَّجَ بَيْنَهُمَا شَيْئًا )
நானும் அனாதைக்கு பொறுப்பேற்றவரும் சொர்க்கத்தில் இவ்வாறு இருப்போம் என்று கூறிய நபி (ஸல்) அவர்கள் ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் சற்று விரித்துக் காட்டி சைகை செய்தார்கள்.
(அறிவிப்பவர் : ஸஹ்ல் இப்னு ஸஃது -ரலி நூல் : புகாரீ 4892)

( كَافِلُ الْيَتِيمِ لَهُ أَوْ لِغَيْرِهِ أَنَا وَهُوَ كَهَاتَيْنِ فِي الْجَنَّةِ )
தன் உறவினருடைய அனாதைக்கோ அல்லது பிறருடைய அனாதைக்கோ பொறுப்பேற்றவரும் நானும் சொர்க்கத்தில் இவ்வாறு -அருகில்- இருப்போம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹரைரா -ரலி நூல் : முஸ்லிம் 5296)

( أنا أول من يفتح له باب الجنة إلا أنه تأتي امرأة تبادرني فأقول لها ما لك؟ ومن أنت؟ فتقول أنا امرأة قعدت على أيتام لي )
சொர்க்கக் கதவு முதன் முதலில் எனக்காகத்தான் திறக்கப்படும். ஆனால் என்னுடன் -சொர்க்கத்தில் நுழைய- ஒரு பெண் வருவாள். நான் அவளிடம் நீ யார்? இவ்வாறு நுழையக் காரணமென்ன? என்று கேட்பேன். அதற்கவள் நான் என்னுடைய அனாதைகளுடன் வாழ்வைக் கழித்த பெண்! என்று கூறுவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹரைரா -ரலி நூல் : அபூயஃலா)

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages