அன்று நான் ஒரு கட்சியில் வேட்பாளர் - தொடர் 04 - ULM. றுபைஸ் - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, 28 July 2018

அன்று நான் ஒரு கட்சியில் வேட்பாளர் - தொடர் 04 - ULM. றுபைஸ்

அன்று நான் ஒரு கட்சியில் வேட்பாளர் - 
தொடர்_04...

இப்படியே சுழன்ற காலங்களோடிருக்க ஒருநாள் ஒருவர் வந்து தம்பி ஒபீஸ் எங்கால எண்டு கேட்டார் ஏன்னா புதிய கட்டிட உள் வேலை நடப்பதால் பழைய பிரதேசசபைக் கட்டிடத்தில் (இப்போதைய நூலகம்) மாநகரசபைக் காரியாலயம் அமைந்திருந்ததால் நானும் காட்டிவிட்டு பக்கத்தில் இருந்த சைக்கிளில் அமர்ந்தேன்.

அவர்தான் ஜெயந்திரன் சேர் கல்முனையில் இருந்து இடம்மாற்றம் பெற்று எமது காரியாலயக் களஞ்சியத்துக்கு பொறுப்பாக அவரை நியமித்திருந்தார்கள்.

அடிக்கடி தாகம் எடுத்தால் திட்டமிடல்,வேலைப் பிரிவில் கடமையில் இருந்த கவிஞர் மஜீத் காக்கா எடுத்து வைக்கும் தண்ணீரில் குடித்துவிட்டு வருவது எனது வழக்கம்.
அன்றும்...
ஒரு பதினொரு மணி இருக்கும் தாகமடுத்துப் போனபோது ஜெயந்திரன் சேரும் மஜீத் காக்காவும் பேசிக்கொண்டிருந்தார்கள் என்னைக் கண்டவுடன் இவர்தானா அந்தப் பையன் எண்டு கேட்ட ஜெயந்திரனிடம் மஜீத் காக்கா ஓமட்டு சொல்லும்போதே கீழ இருந்து வெள்ளப் பால்க் கலனில் இருந்த குடிநீரைக் கொடுத்தார் பக்கத்துல இருந்த கதுரையில் அமர்ந்து அவசர அவசரமாக குடித்துவிட்டு எழுந்தேன்.

ஏன் தம்பி இப்படி அவசரமாக் குடிக்காய் கொஞ்சம் பொறுமையா மொள்ளக்குடியன் எண்டார் ஜெயந்திரன். இல்ல சேர் ccமார் கண்டா உள்ளுக்கிருந்து கதச்சிக்கிருக்கன் எண்டு ஏசுவாங்க கனகாட்டு நான் வாரன் எண்டு போக முனையும்போது தண்ணிக்கலன வாங்கியடுத்த மஜித் காக்கா கொஞ்சம் நில்லன் எண்டுப்போட்டு கொய்யாப்பழ டொபி ஒண்டு தந்தார்.
அதவுரிச்சி அவடத்தையே வாக்கபோடக்க லாச்சத்தொரந்து என்னுடைய உளவியல் நூலான #படிப்புக்_கள்ளியை எடுத்து ஜெயந்திரன் சேர் நான் படிச்சுப் பாத்தன் தம்பி நல்லாரிக்கு படிக்கிற பிள்ளையலுக்கு நல்ல யூஸ்புல்லா இருக்கும் பிறகு ஒன்றும் வெளியிடல்லையா எண்டார்.

கவிதத் தொகுதி ஒன்று முடிந்த தறுவாய் சேர் இப்போ அது மஜீத் காக்காதான் புறுப்f பாக்கார் சரி சேர் முன்னுக்கு ஆள் இல்லாட்டி மாடு வந்து பூக்கண்டு மரங்களச் சப்பிடும் நான் போறன் பொறகு பேசுவோம் எண்டு போக்கொள்ளையே கல்லப்பொறக்கிக்கித்தான் ஓடின செவலக் கன்றொண்டு அப்பான் வாய வக்கார் பூக்கண்டுல.

இப்படியே மாட்டோடும் நாயோடும் மரங்களோடும் புற்களோடும் கடந்தன நாட்கள் சில.

 ஒருநாள் மேயர் சென்ன வரட்டாம் எண்டு வந்து சொன்னார் மஜீத் காக்கா அப்பான் முன்னுக்கு நீண்ட புல்லு நாலஞ்சப் புடுங்கின டக்கன்னு பக்கத்துல இருந்த டெப்புல கையக் கழுவிக்கு பெய்த்தன். 
மேயர்ர றூமுக்க ஜெயந்திரன் சேரும் நசீர் ccயும் இருந்தார்கள் என்னையோ என்று யோசிக்க நேரமில்லை பதட்டம் மனதில்.

மேயர்_ றுபைஸ் ஸ்டோர்ல இப்போ ஜெயந்திரந்தான் பொறுப்பு அத ஒழுங்கு பன்ற வேலையும், சபையின் சொத்துகள் அனைத்தையும் பதிவு செய்ற வேலையும் நிறைய இருக்கு அவர் மட்டும் தனியச் செய்ய ஏலா அதால ஒரு நம்பிக்கையான ஆளப் பாருங்கோ எண்டன் அவர் உங்களத்தான் செலக் பண்ணிருக்கார் இனி நீங்க அவரோடையே ஸ்டோர்ல வேல செய்ங்கோ செரியா எண்டார் செரி சேர் என்று வேலையத் தொடந்தோம் இருவரும்.

கொடுக்கல் வாங்கல் இருப்பு போன்ற அனைத்துப் பதிவுகளையும் எனக்குக் கற்றுத்தந்தார் ஜெயந்திரன் எடக்கட வாற என் சக ஊளியர்களுக்கு நான் கதுரையில் அமர்ந்து பணி செய்வது புறாமையாக இருப்பது தெட்டத்தெளிவாகத் தெரிந்தது இருந்து எழுதும் போது பார்க்கும் அவர்களுக்கு மற்றநேரம் நான் பார்க்கும் நாட்டாமை வேலை தெரியாதில்லையா....!

மாற்றப்படும் மெசிண்ட டயர் தொடக்கம் பின்னாடி கிடக்கும் இரும்புப் பைப்வர பதிவு செய்தோம் பூட்டிக் கெடந்த அரங்கத்தின் அறையில் பதுக்கிவைத்த பல நூறு மண்வெட்டிகளும் மற்றும் ஏனைய பொருட்களையும் கண்டு எனது தொலைபேசியில் படம் எடுத்து மேயரிடம் காட்டி அவரும் உரிய ccயும் நேரடியாக வந்து ccஅது பாதுகாப்பா நான் இவ்வளவு நாளும் வச்சிருந்த என்ற பதிலைக்கேட்டு கோபம் வந்த மேயர் கௌரவமாக அவருக்குத் திட்டிவிட்டு அனைத்தும் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்க களஞ்சியத்துக்கு மாற்றப்பட்டது.

இப்படி ஒவ்வொன்றாகச் செய்வதை நினைத்து என்மீதும் ஜெயந்திரன் மீதும் ஆத்திரம் அடைந்த ccமாரும் ஒருபுறம் இருக்க நேர்மையான எங்கள் மேயரின் ஆதரவு எங்களுக்கு இருந்தது. 

இரும்புப் பைப்புல நாலக் காணல்ல எண்டு மேயரிடம் சொல்லப்போனபோது றியாத் காக்காட மேசையில் ஒரு முதிய பெண் இருக்கிறார் அவரிட றியாத் காக்கா காசு கொஞ்சம் கொடுப்பதைக் கண்டு வினவியபோதுதான் தெரிந்தது மேயரின் பெருந் தன்மை.
 அவருடைய சம்பளப்பணத்தை கொடுத்து வைத்திருக்கிறாராம் யாரும் உதவி கேட்டு வரும் ஏழைகளுக்கு கொடுப்பதற்காக

 #மாஷா_அல்லாஹ்.

புதிய கட்டிடம் முடிந்துவிட்டது திறப்புவிழாக்காக வேலைகள் நடக்கிறது எல்லா ஊளியர்களும் சேர்ந்து பல பிரிவுகளாகப் பிரிந்து வேலைகளைச் செய்தோம். மாநகர கட்டிடத்துக்கு முன்னால் அமைத்த மேடைக்கு எங்கள் தலைவரை அழைத்துவர பட்டினப் பள்ளியில் துவாப்பிரார்த்தனை முடிந்து புறப்பட்டார் தலைவர். ஊரே வீதியில் திரண்டது வரலாறு காணாத அபிவிருத்தியைச் செய்த எங்கள் தேசியத் தலைவனை நிலத்தில் கால் படாமல் வெள்ளைச் சீலை விரித்து அரங்கம்வரைக் கூட்டி வந்தோம் புதிய நியமனம் கிடைத்த அந்த நாப்பத்திரெண்டுபேரும்.

அந்த சனத்திரளில் நடந்துகொண்டிருக்கும் தலைவரும் பிரமுகர்களுக்கும் முன் நான்கு பேர் வெள்ளைச் சீலைகளை வாங்கி வாங்கி விரிக்க எமது அபிவிருத்தி நாயகன் சிங்கம் போல நடந்து கொண்டிருக்க நானும் என்னோடு சிலரும் சனத்தை விலக்கிக்கொண்டு பின்னாடி விரித்த சிலைகளை எடுத்துக்கொண்டு முன்னாடி கொடுப்பதும் பின் பின்னாடி எடுப்பதும் என்று வேகமாகச் சுழன்று ஓடிக்கொண்டிருந்தோம்.

எடையில தௌஹீத் செண்டர் பள்ளியடிய நிண்ட  நன்பன் ஒருவன் என்னைக் கண்டு கையப்புடிச்சி என்ன றுபைஸ் வண்ணான் வேல பாக்குற எண்டான் அவன் எதிர்க்கட்சிக்காறன்.
எப்பிடிப் பத்தும் நமக்கு நல்ல காரமான பதில் வரவில்லையே அந்தநேரம். 
டே வண்ணான் என்ன றோட்டுல வெள்ளச் சீலையா விருச்சிக்கித் திர்ரான் எண்டுபோட்டு முன்னுக்கு ஓர்ரன் சீலையோட அன்னாயின்னா தலைவர் றோட்டுல கால வக்கத்தான் பாஹ் சீலைய முன்னுக்கு விரிச்சாக்கள்ள கைல கொடுக்க ஏலாம ஆக்களுக்கு மேலால எறிஞ்சு புடிச்சி விரிச்சிட்டானுகள்.
 நிலத்தில் படவில்லை கால் தலைவரின்.

அரங்கத்தடிய இருந்து செங்கமளத்தில் அழைத்துச் சென்று எங்கள் தலைவர் மேடைக்கு முன்பாக அமர்ந்து இருக்க நிகழ்வுகள் இனிதே ஆரம்பித்தது.

பேக்குல கொண்டுவந்த உடுப்ப மாத்திக்கு என்னால் வடிவமைக்கப்பட்ட மாநகரசபையில் (logo) சின்னத்தின் மாதிரியை மேயர் ஆணையாளர் இருவர் கைகளிலும் மேடையில் வைத்துக் கொடுத்துவிட்டு  அப்டியே கீழுக்கு எறங்கினன் வண்ணான் கத கதச்சவனக் கண்டுட்டன்.

மெல்ல அவரக் கூட்டிக்கு ஓரமாப் போய் என்ன ஜீ நீங்க கேட்ட எண்டன்.

 இல்ல றுபைஸ் அதுக்கில்ல 
என்ன அல்லாஹ்வ மறந்த வேல இது...?
 ரசூலுல்லாஹ்வ விடப் பெரியாளா இவர்...?
எத்தன நபிமார்கள் அரசனாக ஆட்சி செய்திருக்காங்க அவர்களுக்கு கூட செய்யாத வேல இது எண்டான்.
கோபம் பொத்துக்கு வந்தது எனக்கு 
#டே_ஒண்ட_வேலைய நீ பாரண்டா எங்குட தலைவருக்கு நாங்க செஞ்சோம் எண்டன்.

சரி அத உடு நீ கட்சி மாறி சேக்குட்டுல இருக்கக்க முஸ்லிம் காங்கிரஸ் மீட்டிங் மர்கஸ் பள்ளியடிய நடந்திச்சு அதுல கொப்பறா உவைஸ் கதக்கிறத்தக் கொழைக்க பள்ளி மைக்கில தூசன வார்த்தையால கத்திக் கூச்சலிட்டாங்க ஒனக்கும் கேட்டிருக்கும்தான எண்டான்.

டேய் பேயனப்போல கதைக்காம ஒண்ட வேலப்....பு...... பார் எண்டுப்போட்டு மேடையை நோக்கி விரைந்தேன்.
தொடரும்....
Gafrufais

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages