மனிதனை வாசித்தல்
....................................
விரிந்த புத்தகத்தினுள்
மனிதன் நிரம்பியிருந்தான்
இதயத்தை கழற்றி விட்டு..
வாசிக்கின்றேன்,
சுவாசப்பைக்குள்
சிக்கிக் கிடந்தது சிலரின் எழுத்துக்கள்.
வாசித்தலின் கூர்மையில்
உச்சம் கொண்டது ராகம்
சொட்டுச் சொட்டாய்..
சில மனிதர்களை நினைக்கையில்
தாளம் தப்பியபடி
வாசித்துக்கொண்டிருந்தேன்
மனிதாபிமானம் மெட்டமைக்க
இசையவில்லை..
அகல விரிவுகொள்ளும் கடல்
திறந்து கிடக்கும் ஆகாசவெளி
துண்டு நிலம்..
எல்லாமே தன்னிலை என
மார்பு தட்டுகிறான்
சிலரை வாசிக்காமலே
கடந்து கொண்டிருந்தேன்
இடையில் வழிமறித்து
கடைசிப்பக்கத்திலிருந்து
அவள் சொன்னாள்..
நானும் மனிதன்தான் என்று..!
மருதமுனை விஜிலி
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
Author Details
gafslr
No comments:
Post a Comment