வாட்ஸ்அப்பில் பெண்களை இம்சிக்கும் தொல்லைகளில் இருந்து விடுபட - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday 6 January 2018

வாட்ஸ்அப்பில் பெண்களை இம்சிக்கும் தொல்லைகளில் இருந்து விடுபட

வாட்ஸ்அப்பில் பெண்களை இம்சிக்கும் தொல்லைகளில் இருந்து விடுபட 5 பாதுகாப்பு நடவடிக்கைகளை பற்றி விரிவாக பார்க்கலாம்.
Image result for relief to whatsapp chat
வாட்ஸ்அப்பில் பெண்களை இம்சிக்கும் தொல்லைகளில் இருந்து விடுபட 5 பாதுகாப்பு நடவடிக்கைகள் இங்கே பார்க்கலாம்.

1. ப்ரொஃபைல் பிக்சர்

நீங்கள் மொபைல் நம்பர் தரவில்லை என்றாலும், காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் குரூப், ரோட்டராக்ட் குரூப், ஆபீஸ் குருப் என்று குரூப்பில் இருந்து உங்கள் எண்ணை எடுத்துக்கொண்டு, 'ஸ்டேட்டஸ் சூப்பர்', 'டிபி க்யூட்' என்று ஆரம்பிக்கிறார்களா? வாட்ஸ்அப் அக்கவுன்ட் செட்டிங்ஸில், ப்ரொஃபைல் பிக்சர், ஸ்டேட்டஸ் அனைத்தும் நீங்கள் அலைபேசியில் பதிந்துவைத்துள்ள தொடர்புகளுக்கு மட்டுமே தெரியும் வகையில் 'கான்டாக்ட்ஸ் ஒன்லி' என்று செட்செய்துவிடுங்கள். அந்நியர்கள் அவுட்!

2. லாஸ்ட் சீன்

நீங்கள் கடைசியாக எப்போது வாட்ஸ்அப் பார்த்தீர்கள் என்பதை உலகத்துக்குச் சொல்லும் ‘லாஸ்ட் சீன்’ ஆப்ஷனைப் பார்ப்பதையே முக்கிய வேலையாக வைத்துக்கொண்டு, ‘என்ன இந்தப் பொண்ணு நைட் 12 மணிக்கு ஆன்லைன் வந்திருக்கு’ என்று உங்களை நிழலாகத் தொடரும் கவனிப்பு வளையத்தில் இருந்து விடுபடுங்கள். அதற்கு, 'லாஸ்ட் சீன்'-ஐ யாரும் பார்க்கமுடியாதபடி 'நோபடி(Nobody)' என்று மாற்றிவிடுங்கள். சுதந்திரம் பேக்கப்!

3. புளூ டிக்

இரண்டு புளூ டிக்குகளைப் பார்த்துவிட்டால், இங்கு பலரும் ஏதோ கிரீன் சிக்னலை பார்ப்பதுபோல மூளை பிசகிக்கிடக்கிறார்கள். அவர்களுக்குப் புரியவைப்பதற்கு எல்லாம் உங்களுக்கு நேரமில்லை. எனவே, அதுபோன்ற கான்டாக்ட்கள், தெரியாத எண்களில் இருந்து வரும் தொடர் மெசேஜ்களை ஓபன் செய்யாமல் இருந்துவிடுங்கள். புளூ டிக் பார்க்கவில்லை என்றால் ஆட்டோமெட்டிக்காக அவுட் ஆகிக்கொள்வார்கள் நாகரிகம் தெரிந்தவர்கள். எளிமையான தீர்வு!

4. சென்டிமென்டல் ஆஃப்

இது பழைய டெக்னிக்தான். பெர்சனல் சாட்டில் வந்து பொறுத்துக்கொள்ள முடியாதபடி தொல்லைகொடுத்தால், அந்த கான்டாக்ட்டும் நீங்களும் இருக்கும் குரூப் சாட்டில், ‘சொல்லுங்க பிரதர்’ என்று அவருக்குத் தட்டுங்கள். பார்ட்டி ஆஃப் ஆகிவிடும். சப்ஸ்க்ரைபர் நாட் ரீச்சபிள்தான்!

5. பிளாக்

‘குட் மார்னிங்’, ‘குட் டே’ என்று டீசன்டாக என்ட்ரிகொடுத்துவிட்டு, பின் மெல்ல மெல்ல எல்லை மீற ஆரம்பித்தால்... யோசிக்காமல் அந்த கான்டாக்ட்டை பிளாக்செய்து விடுங்கள். பிரச்னையை வளரவிட்டு வருந்தாதீர்கள். பார்டர் தாண்டினால் பிளாக்! இந்த எல்லா பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மீறி ‘என் பணி உன்னை டிஸ்டர்ப் செய்வதே’ என்று மெயின் இன்பாக்ஸ் வருபவர்களை, மைண்டில் இருந்து கன்ட்ரோல்+ஆல்ட்+டெலிட். உங்களுக்கு உருப்படியான வேலைகள் நிறைய உள்ளன!

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages