கடுகு எண்ணெய்க்குள் ஏராளமான அழகு ரகசியங்கள் ஒளிந்து கிடக்கின்றன. தலைமுடியையும் சருமத்தையும் பொலிவாக மாற்றக்கூடிய சீக்ரெட் கடுகு எண்ணெய்க்குள் மறைந்து இருக்கிறது.
கடுகும் அதிலிருந்து தயாரிக்கப்படும் கடுகு எண்ணெய்யும் சமையலுக்கு மட்டுமே பயன்படுகின்றன எனவும் இதயத்தை பலப்படுத்த உதவும் எனவும் மட்டுமே நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால் கடுகு எண்ணெய்க்குள் ஏராளமான அழகு ரகசியங்கள் ஒளிந்து கிடக்கின்றன என்பது தெரியுமா? ஆம் தலைமுடியையும் சருமத்தையும் பொலிவாக மாற்றக்கூடிய சீக்ரெட் கடுகு எண்ணெய்க்குள் மறைந்து இருக்கிறது.
சருமத்துக்கு கடுகு எண்ணெய் ரசாயனம் கலக்காத இயற்கையான சன் ஸ்கிரீனாகப் பயன்படுகிறது. சருமத்தின் நிறத்தை மெருகூட்டுவதோடு, கரும்புள்ளிகளையும் நீக்கும். கடுகு எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சம அளவில் கலந்து, உடல் மற்றும் முகத்தில் தடவி, நன்கு மசாஜ் செய்து குளித்துவர சருமம் மென்மையாகவும் பளபளப்புடனும் திகழும்.
தினமும் காலையில் குளிக்கச் செல்வதற்கு 10 நிமிடத்துக்கு முன்பாகவும் இரவில் தூங்குவதற்கு முன்பும் உதட்டில் கடுகு எண்ணெய்யை தேய்த்து வந்தால், உதடுகளின் நிறம் மேம்படுவதோடு, மிக மென்மையாகவும் மாறிவிடும். சருமத்துக்கு இயற்கையான கிளன்சராக கடுகு எண்ணெய் பயன்படுகிறது.
கடுகும் அதிலிருந்து தயாரிக்கப்படும் கடுகு எண்ணெய்யும் சமையலுக்கு மட்டுமே பயன்படுகின்றன எனவும் இதயத்தை பலப்படுத்த உதவும் எனவும் மட்டுமே நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால் கடுகு எண்ணெய்க்குள் ஏராளமான அழகு ரகசியங்கள் ஒளிந்து கிடக்கின்றன என்பது தெரியுமா? ஆம் தலைமுடியையும் சருமத்தையும் பொலிவாக மாற்றக்கூடிய சீக்ரெட் கடுகு எண்ணெய்க்குள் மறைந்து இருக்கிறது.
சருமத்துக்கு கடுகு எண்ணெய் ரசாயனம் கலக்காத இயற்கையான சன் ஸ்கிரீனாகப் பயன்படுகிறது. சருமத்தின் நிறத்தை மெருகூட்டுவதோடு, கரும்புள்ளிகளையும் நீக்கும். கடுகு எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சம அளவில் கலந்து, உடல் மற்றும் முகத்தில் தடவி, நன்கு மசாஜ் செய்து குளித்துவர சருமம் மென்மையாகவும் பளபளப்புடனும் திகழும்.
தினமும் காலையில் குளிக்கச் செல்வதற்கு 10 நிமிடத்துக்கு முன்பாகவும் இரவில் தூங்குவதற்கு முன்பும் உதட்டில் கடுகு எண்ணெய்யை தேய்த்து வந்தால், உதடுகளின் நிறம் மேம்படுவதோடு, மிக மென்மையாகவும் மாறிவிடும். சருமத்துக்கு இயற்கையான கிளன்சராக கடுகு எண்ணெய்
பயன்படுகிறது.
கடுகு எண்ணெய்யை இரவு தூங்கும் போது தலையில் தேய்த்து, முடியின் வேர்க்கால்களில் இறங்கும்படி தேய்த்து மசாஜ் செய்து வரவேண்டும். கடுகு எண்ணெய் தலைமுடியின் வேர்க்கால்களுக்குள் சென்று, முடியின் வளர்ச்சியைத் தூண்டுகிறது. கடுகு எண்ணெய்யைத் தொடர்ந்து தலைமுடிக்கு தேய்த்து வந்தால் இளநரையைத் தடுக்க முடியும்.
கடுகு எண்ணெய்யை சம அளவு தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து பயன்படுத்தி வர, தலைமுடி நீண்டு அடர்த்தியாக வளரும். தலைமுடிக்கும் சருமத்துக்கும் மட்டுமல்லாது பற்களையும் பளிச்சென சுத்தமாக வைத்திருக்கவும் கடுகு எண்ணெய்யை பயன்படுத்த முடியும்.
பல் தேய்த்து முடித்தவுடன் சிறிது கடுகு எண்ணெய், நான்கு துளிகள் எலுமிச்சை சாறு, கொஞ்சம் உப்பு சேர்த்து, வாயில் ஊற்றி இரண்டு நிமிடங்கள் வரை வைத்திருந்து, வாய் கொப்பளிக்க வேண்டும். அப்படி தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் பற்கள் பளிச்சென மின்னும். பற்களில் ஏதேனும் கறைகள் இருந்தால் நீங்கும். அதேபோல் காலையில் பல் துலக்குவதற்கு முன்பாக, கொஞ்சம் கடுகு எண்ணெய்யை வாயில் ஊற்றி, சிறது நேரம் வைத்திருந்து கொப்பளித்தால், பற்களில் உண்டாகும் நோய்த் தொற்று, ஈறுகளில் உண்டாகும் வீக்கம், ரத்தம் கசிதல் ஆகியவை சரியாகும்.
No comments:
Post a Comment