பற்களில் கூச்சம் வருவதற்கான காரணங்கள் - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, 16 January 2018

பற்களில் கூச்சம் வருவதற்கான காரணங்கள்

சிலருக்கு சூடான, குளிர்ந்த அல்லது மிகவும் இனிப்பான, புளிப்பான உணவுகளை சாப்பிடும் போது பற்களில் கூச்சம் ஏற்படும். இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
Image result for பற்களில் கூச்சம் வருவதற்கான காரணங்கள்
பல் கூச்சம் என்பது ஒரு பொதுவான பிரச்சனை. சூடான மற்றும் குளிர்ந்த உணவுகள் அல்லது மிகவும் இனிப்பான மற்றும் புளிப்பான உணவுகளை எடுத்துக் கொள்ளும் ஒரு வலி என்று இது குறிப்பிடப்படுகிறது. தீவிர நிலையில் குளிர்ந்த நீர் அருந்தினால் கூட இந்த வலி உண்டாகும்.

பல் கூச்சத்திற்கான முக்கிய காரணம், பற்களின் மேலிருக்கும் எனாமல் அடுக்கு குறைந்து, கூழ் போன்ற மென்மையான பகுதிகளை வெளிப்படுத்தும். இந்த கூழ், பற்களின் உணர் நரம்புகளைக் கொண்டிருக்கும். இந்த பகுதி வெளிப்படும் போது சூடு, குளிர்ச்சி, இனிப்பு, புளிப்பு போன்ற உணர்ச்சிகள் பல மடங்காக பெருகுவதே மக்கள் திடீரென வலியை வெளிப்படுத்துவதற்கான காரணம்.

தீவிரமான முறையற்ற மற்றும் ஆர்வமாக பல் துலக்குதல் அல்லது வயது மேம்பாடு மூலம் ஏற்படலாம். ஈறுகள் குறையும் போது இனிப்பு, புளிப்பு, சூடான மற்றும் குளிர்ந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால், பல்லின் வேர் சேதமடையும்.

ஈறு நோய் அல்லது வீக்கத்தால் ஈறுகள் பலவீனமடைகின்றன. பற்களை சுற்றியுள்ள ஈறுகளில் வீக்கம் மற்றும் அழற்சி ஏற்படும் போது, வேர் மற்றும் நரம்புகளானது வெளியே தெரிவது பல் கூச்சத்தை அதிகரிக்கும்.
Image result for பற்களில் கூச்சம் வருவதற்கான காரணங்கள்
பற்களின் மேலே உள்ள இடைவெளியானது பாக்டீரியாக்களை உள்ளே செல்ல அனுமதிப்பதுடன், அவை வாயின் உள்ளே சென்று பற்களில் தொற்றை ஏற்படுத்துகின்றன. இதற்கு சிகிச்சை அளிக்காத போது, இதுவே பெரிய தலை வலியாக மாறும். இதனால் பல் கூச்சம் ஏற்படும்.

உங்கள் வாய்க்குள் செல்லும் அனைத்துமே முதலில் உங்கள் பற்களைப் பாதிக்கின்றது. அதிக அளவு இனிப்பு மற்றும் ஓட்டும் உணவுகள் (சாக்லேட், மிட்டாய்கள், ஐஸ்கிரீம்கள் போன்றவை), அமில உள்ளடக்கம் கொண்ட உணவுகள் (ஊறுகாய், ஸ்ட்ராபெர்ரி போன்றவை), கோலா போன்ற காற்றூட்டப்பட்ட பானங்கள் மற்றும் மிகவும் குளிர்ச்சியான மற்றும் சூடான உணவுகள் போன்றவை பற்களில் உள்ள எனாமலின் எண்ணிக்கையை குறைத்து பல் கூச்சத்திற்கு வழிவகுக்கும்.

நீண்ட காலம் பயன்படுத்துதல் சந்தைகளில் கிடைக்கும் மௌத் வாஷ் உங்களை ப்ரெஷ் ஆக வைத்திருக்கும். ஆனால் அதில் உள்ள அமில உள்ளடக்கங்கள் பற்களில் உள்ள எனாமலை பலவீனமடைய செய்யும். இதன் மூலம் பல் கூச்சம் ஏற்படலாம்.

நாம் அனைவரும் பளிச்சிடும் பிரகாசமான பற்களையே விரும்புவோம். மங்கலான நிறம் கொண்ட நம்மில் சிலர் முத்து போன்ற வெண்மையான பற்களை பெற விலையுர்ந்த சிகிச்சைகளை செய்து கொள்வார்கள். அவை உங்களுக்கு பிரகாசமான புன்னகையை அளித்தாலும் கூட, சொல்ல இயலாத பல சேதங்களை எனாமலுக்கு ஏற்படுத்தும். எனவே நீங்கள் வெண்மையான பற்களைப் பெற செல்லும் முன், ஒரு பல் மருத்துவருடன் அது ஏற்படுத்தும் சேதம் மற்றும் விளைவுகள் குறித்து கேட்டறிந்து கொள்ளவும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages