பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாமல் மஹிந்த ராஜபக் ஷ பயந்து ஓடினார். கிராம பொருளாதாரத்தை பொறுப்பேற்க தவறினார். அவ்வாறான ஒருவருக்கு மீண்டும் கிராமங்களை வழங்குவதா? அவருக்கு கிராமங்களை கட்டியெழுப்ப முடிந்திருக்க வேண்டும். ஏன் தப்பித்துஒடினார்? எனவே தப்பித்து ஒடிய மஹிந்த ராஜபக் ஷவிற்கு கிராமத்தின் பலத்தை மீண்டும் வழங்கினால் என்ன நடக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பினார்.
பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாமல் மஹிந்த ராஜபக் ஷ பயந்து ஓடினார். கிராம பொருளாதாரத்தை பொறுப்பேற்க தவறினார். அவ்வாறான ஒருவருக்கு மீண்டும் கிராமங்களை வழங்குவதா? அவருக்கு கிராமங்களை கட்டியெழுப்ப முடிந்திருக்க வேண்டும். ஏன் தப்பித்துஒடினார்? எனவே தப்பித்து ஒடிய மஹிந்த ராஜபக் ஷவிற்கு கிராமத்தின் பலத்தை மீண்டும் வழங்கினால் என்ன நடக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பினார்.உள்ளூராட்சி மன்றங்களில் தலைவர்கள் ஏதாவது குற்றச்சாட்டுக்கு உள்ளானால் விசாரணை முகங்கொடுக்க நேரிடும் என்பதனை நினைவில் வைத்து கொள்ளுங்கள். துஷ்பிரயோகம் செய்து சிக்குண்ட மொட்டு சின்னத்திற்கு வாக்களித்து பிரயோசனம் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு நேற்று கொழும்பு கெம்பல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் உரையாற்றுகையில்,
உள்ளூராட்சி மன்ற தேர்தல் மிகவும் முக்கியமானது. இது வெற்றிப்பெற வேண்டிய தேர்தலாகும். எமது பலத்தை காண்பிக்க இந்த தேர்தலில் வெற்றி பெறுவது கட்டாயமாகும். நாம் நாட்டின் அதிகாரத்தை பெற்றுக்கொண்டோம். தற்போது கிராமத்தின் அதிகாரத்தை பெற வேண்டும். நாட்டின் பலத்தையும் கிராமத்தின் பலத்தையும் நாட்டினதும் இளைஞர்களினனும் எதிர்கால நலனுக்காகவே கேட்கின்றோம். நன்றாக வாழும் சூழலை ஏற்படுத்துவதற்காகவே ஜனாதிபதி தேர்தலில் ஒன்றிணைந்தோம். அதற்காகவே தற்போது இந்த தேர்தலில் ஒன்றிணைந்துள்ளோம்.
இரண்டு வருடங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்கின்றனர். அது தொடர்பில் ஞாபகமூட்ட நான் விரும்புகின்றேன். 2017 ஆம் ஆண்டு நடத்த வேண்டிய ஜனாதிபதி தேர்தலை மஹிந்த ராஜபக்ஷ இரு வருடங்களுக்கு முன்னரே நடத்த முனைந்தார். ஏனெனில் நாட்டின் பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சி கண்டது. கிராமத்தின் பொருளாதாரமும் நகர கேந்திர பொருளாதாரமும் முழுமையாக வீழ்ச்சி கண்டன. நாட்டின் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்யும் பலம் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இல்லாத காரணத்தினால் அவசரமாக தேர்தலுக்கு சென்றார். என்றாலும் எதிர்பாராத விதமாக தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வி கண்டார். நாட்டினதும் இளைஞர்களினதும் எதிர்காலத்தை இல்லாமல் செய்தார்.
எனினும் கடந்த இரு வருடத்தில் வீழ்ச்சி அடைந்த பொருளதாரத்தை ஸ்திரமான நிலைமைக்கு கொண்டு வரவே நாம் முனைந்தோம். தற்போது கடன் சுமையை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இதன்படி கடன் அடைத்து வருகின்றோம். கடன் செலுத்தாவிட்டால் எமது நாடு அழிவு பாதையை நோக்கி பயணிக்கும் நிலைமை ஏற்படும். இதன்படி இதிலிருந்தே எமது வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.
முன்பு இந்த தேர்தல் முறைமையை கொண்டு வர எமக்கு முடியாமல் போனது. எனினும் தற்போது அனைத்து சிறிய கட்சிகளையும் இணக்கப்பாட்டுக்கு கொண்டு வந்து இந்த முறைமையை அமுலுக்கு கொண்டு வந்தோம். இம்முறை கிராமத்தை ஆட்சி செய்ய பல புதிய முகங்கள் போட்டி களத்திற்கு வந்துள்ளனர். அடுத்த தேர்தலில் இன்னும் அதிகமான புதியவர்கள், இளைஞர்கள் போட்டியிடுவர். அதேபோன்று பெண் பிரதிநிதித்துவத்தை 25 வீதமாக அதிகரித்தோம்.
அம்பாந்தோட்டை முதல் கண்டி வரைக்கும் பாரிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி முன்னெடுக்கவுள்ளோம். மத்திய அதிவேக வீதிக்கு முன்னைய ஆட்சியின் போது நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இந்நிலையில் தற்போது நாம் அதனை ஆரம்பித்துள்ளோம். தெற்கில் வீதிகள் பூர்த்தி செய்யப்படவில்லை. அம்பாந்தோட்டை துறைமுகம் பாரிய நட்டத்தில் இயங்கியது. இதனை நாம் மாற்றி அமைத்தோம்.
டுபாய், சிங்கப்பூர் போன்ற அபிவிருத்தியை நாட்டில் கொண்டு வரவுள்ளோம். காலி, குருநாகல், களுத்துறை உட்பட பல பகுதிகளில் பல்வேறு வர்த்தக வலயங்களை உருவாக்கவுள்ளோம். இதன் ஊடாக தொழில்வாய்ப்பினை அதிகரிக்கவுள்ளோம். திருகோணமலையையும் கண்டியையும் ஒன்றிணைக்கவுள்ளோம். மேலும் யுத்ததினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யவுள்ளோம்.
எனவே நாம் அடித்தளமிட்ட திட்டங்களை பாதுகாத்து முன்கொண்டு செல்ல வேண்டும். எனவே பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாமல் தப்பித்து ஒடிய மஹிந்த ராஜபக்ஷவிற்கு கிராமத்தின் பலத்தை மீண்டும் வழங்கினால் என்ன நடக்கும். பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாமல் மஹிந்த ராஜபக்ஷ பயந்து ஒடினார். கிராம பொருளாதாரத்தை பொறுப்பேற்க தவறினார். அவ்வாறான ஒருவருக்கு மீண்டும் கிராமத்தை வழங்குவதா?. அவருக்கு கிராமத்தை கட்டியெழுப்ப முடிந்திருக்க வேண்டும். ஏன் தப்பித்து ஒடினார்?. அவர் தப்பித்து ஒடுவதற்கு இயலாமையே காரணமாகும்.
முன்னைய ஆட்சியின் ஊழல் மோசடி தொடர்பான 19 விசாரணைகள் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்துள்ளோம். 40 விசாரணைகளை பொலிஸில் செய்கின்றனர். தாமதம் உள்ளது. இதன்படி துரிதமாக விசாரணை செய்ய நீதிமன்றம் உருவாக்கவுள்ளோம். இந்த விடயத்தில் அச்சம் கொள்ள தேவையில்லை. இவர்களினால் கிராமத்தை கட்டியெழுப்ப முடியாது.
எமது கட்சியினருக்கான அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளானவர்களுக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. எம்மால் அனைத்து பிரச்சினையையும் தீர்க்க முடியவில்லை. எனினும் துரிதமாக அனைத்து பிரச்சினையையும் தீர்ப்போம். இந்நிலையில் நாட்டின் பிரச்சினைகளை தீர்த்து வருவதுடன் அபிவிருத்தியையும் முன்னெடுத்து வருகின்றோம். இந்நிலையில் சிறிது ஒய்வுக்காக நான் நடனமும் ஆடினேன்.
அரச தொழில் மாத்திரமின்றி தனியார் தொழில் வாய்ப்புகளயைும் ஏற்படுத்துவோம் வடக்கு கிழக்கு மற்றும் மலையகம் உட்பட நாடளாவிய ரீதியில் வீடமைப்பு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
ஊழல், மோசடி மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபட மாட்டோம் என்ற சத்தியபிரமாணம் எடுக்க தேவையில்லை. நாம் கிராமத்திற்கும் நல்லாட்சியை கொண்டு செல்வோம். உள்ளூராட்சி மன்றங்களில் தலைவர்கள் ஏதாவது குற்றச்சாட்டுக்கு உள்ளானால் விசாரணை முகங்கொடுக்க நேரிடும் என்பதனை நினைவில் வைத்து கொள்ளுங்கள். துஷ்பிரயோகம் செய்து சிக்குண்ட மொட்டு சின்னத்திற்கு வாக்களித்து பிரயோசனம் கிடையாது. அவர்களினால் கிராமத்தை கட்டியெழுப்ப முடியாது. கிராமத்தின் ஆட்சி அதிகாரத்தை ஐக்கிய தேசியக் கட்சி பெற்று தர வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment