நீதிபதிகளை தொடர்ந்து தேர்தல் கமிஷனர்களின் சம்பளம் இரு மடங்காக உயர்கிறது - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday 18 January 2018

நீதிபதிகளை தொடர்ந்து தேர்தல் கமிஷனர்களின் சம்பளம் இரு மடங்காக உயர்கிறது

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளை தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணையர்களின் சம்பளம் இரு மடங்காக உயர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
Related image
புதுடெல்லி:

இந்திய தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் 2 தேர்தல் கமிஷனர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ‘தேர்தல் கமிஷன் சட்டம் 1991’-ன்படி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு இணையான சம்பளம் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு நீதிபதிகளின் சம்பளத்தை 2 மடங்குக்கு மேல் உயர்த்துவதற்கான மசோதா ஒன்று நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டது. மக்களவையில் நிறைவேறிய இந்த மசோதா, மாநிலங்களவையில் வருகிற பட்ஜெட் தொடரில் தாக்கல் செய்து நிறைவேற்றப்படும் என தெரிகிறது.

அங்கும் இந்த மசோதா நிறைவேறி ஜனாதிபதி ஒப்புதலுடன் சட்டமாகி விட்டால், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியின் சம்பளம் ரூ.2.80 லட்சமாக (தற்போதைய சம்பளம் ரூ.1 லட்சம்) அதிகரிக்கும். சுப்ரீம் கோர்ட்டின் பிற நீதிபதிகள் மற்றும் ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகள் ரூ.2.50 லட்சமும் (ரூ.90 ஆயிரம்), ஐகோர்ட்டு நீதிபதிகள் ரூ.2.25 லட்சமும் (ரூ.80 ஆயிரம்) மாத சம்பளமாக பெறுவார்கள்.

இவ்வாறு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் சம்பளத்தின் அடிப்படையில், 3 தேர்தல் கமிஷனர்களின் சம்பளமும் ரூ.2.50 லட்சமாக அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.  

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages