கிளிநொச்சியில் அமைந்துள்ள அன்னை இல்ல முன்பள்ளி சிறுவர்களின் தேவைகளை கவனத்தில் கொண்டு பாடசலை உபகரணங்கள் கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்தின் ஏற்பாட்டில் நன்கொடையாக வழங்கப்பட்டது.
கிளிநொச்சி நூலக வளாகத்தினுள் அண்மையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிளிநொச்சி பாதுகாப்பு படைத்தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன கலந்துகொண்டார்.
160 முன் பள்ளி சிறுவர்களுக்கு ஒரு லட்சம் பெறுமதி மிக்க பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பிரதேதசத்தில் உள்ள கத்தோலிக்க குருமார்கள், ஆசிரியர்கள் மற்றும் அப்பிரதேச மக்கள் கலந்துகொண்டனர்.



No comments:
Post a Comment