காஸின் விலையை அதிகரிப்பதற்கு எந்தத் தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஆட்சியில் உள்ள தற்போதைய அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதாக கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
தொடர்ந்தும் செய்தியாளர்களுக்கு அவர் கருத்து தெரிவிக்கையில்,
2015ஆம் ஆண்டில் ஸ்திரத்தன்மையுடன் கூடிய அரசாங்கம் உருவாக்கப்பட்டது. இதற்கு பல கட்சிகளும் ஒத்துழைப்புவழங்கியிருந்தன. அன்று மக்கள் வழங்கிய ஆணையை பாதுகாத்து அவர்களின் எதிர்ப்பார்ப்புக்களை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
காஸின் விலையை அதிகரிப்பதற்கான எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை. கேஸின் விலையை அதிகரிப்பதற்கான யோசனைகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
நாட்டினதும் மக்களினதும் நலன்கருதி செயற்படுவதாகக் கூறிய அவர், கட்சித் தலைவர்களின் தேவைக்கு அமைய செயற்படுவதில்லை என்றும் வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment