எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்காளர்களின் வசதி கருதி 134 வாக்களிப்பு மத்திய நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகர் எமது செய்திப்பிரிவிற்கு இது தொடர்பில் இன்று தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 72,961 ஆகும்.
பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுப்பட்டுள்ளனர். இதுவரையில் 105 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் தேர்தல் வன்முறைகள் தொடர்பில் குறிப்பிடத்தக்க பாரிய சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் ஓவ்வொரு வாக்களிப்பு நிலையங்களிலும் 2 பொலிசார் கடமைகளில் ஈடுபடவுள்ளனர்.முல்லைத்தீவு மாவட்டத்திற்கு உட்பட்டதாக 32 நடமாடும் பொலிஸ் சேவை ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
இந்த நடமாடும் பொலிஸ் சேவை முல்லைத்தீவு , வெளிஒயா முள்ளியவளை , ஒட்டிச்சுட்டான் , புதுகுடியிருப்பு , மாங்குளம் ,மல்லாவி போன்ற இடங்களில் ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment