தோட்டப்புற பிள்ளைகளின் போஷாக்கு குறைப்பாட்டை நீக்கும் நோக்கில் திரிபோசா வழங்கும் வேலைத்திட்டத்தை விரிவுபடுத்துமாறு சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரட்ன அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
தோட்டப்புற பிள்ளைகளின் போசாக்கு இன்மையை தடுப்பதும், முன்பள்ளி மாணவர்களுக்கான பொருத்தமான உணவு வகைகளை வழங்குவது பற்றியும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.
முதல் கட்டமாக நான்கு மாதங்களுக்கு போசாக்கு அடங்கிய பிஸ்கட் விநியோகிக்கப்படவிருக்கிறது.
கடந்த ஆண்டு தோட்டப் பிரதேசங்களில் சுகாதார அதிகாரிகளுக்கு பத்து லட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதிவாய்ந்த திரிபோசா விநியோகிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment