மாதுளம் பழத்தில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா? - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, 4 March 2018

மாதுளம் பழத்தில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா?

Image result for மாதுளம்


மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உண்டு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து குணம் பெறலாம்.
திருமணமான பெண்களுக்கு கருவுறுதலில் பிரச்னை இருந்தால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் மாதுளம்பழம் சாப்பிட்டுவரலாம். ஹார்மோன்  குறைபாடுகள் நீங்கி, கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும். 
 
மெனோபாஸ் காலங்களில் ஈஸ்ட்ரோஜென்னின் உற்பத்தி குறைந்து, மூட்டுவலி மற்றும் எலும்புத் தேய்மானம் அதிகரிக்கும். இது போன்ற காலங்களில் பெண்கள் தினமும் மாதுளம்பழ ஜூஸ் குடிக்கலாம். அது, உடலில் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தியைத் தூண்டும்; எலும்புகள் வலுப்பெற உதவும்.
 
மாதுளைப் பழச்சாறு பெண்களின் கருவளர் காலத்தில் ஏற்படும் மசக்கை மற்றும் வாந்தியை குணப்படுத்தும். உடல் சூட்டினைத் தணித்து கருப்பைக்கு வலுவூட்டி  இரத்த விருத்தி செய்து கருவை நலமுடன் வளர்க்கும். ஐந்தாவது மாதம்வரை மாதுளையைச் சாப்பிடலாம்.
 
மாதுளையின் விதைக்குச் காச ரோகத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும், சுக்கிலத்தைப் பெருக்கும் சக்தியும் நீர்க்சுருக்கும் நோய்களைக் குணமாக்கும் தன்மையும் உண்டு. பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிக்கு மாதுளை மிகவும் சிறந்தது.
 
மாதுளை சாறு தொடர்ந்து 40 நாட்கள் அருந்தி வந்தால் பெண்களின் மாதவிடாய் பிரச்சனை நீங்கும். நினைவாற்றல் பெருகும். ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
 
சூட்டின் காரணமாக மூக்கில் குருதி வடியும் பிரச்சனை இருப்பவர்களுக்கு அருகம்புல் சாறு இரு தேக்கரண்டி மாதுளைப்பூச் சாறு இரு தேக்கரண்டி கலந்து தினமும் மூன்று வேளை கொடுத்துவர முற்றிலும் குணமடையும்.
 
மாதுளையில் உள்ள ‘எல்லஜிக் அமிலம்’ (Ellagic Acid) சூரிய வெப்பத்தால் தோல்களில் ஏற்படும் கருமையையும், தோல் புற்றுநோயையும் தடுக்கும்.
 
மாதுளம்பழச்சாறு தலைமுடியின் வேர்களை உறுதிப்படுத்தும். தலையில் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, முடிவளர்ச்சியைத் தூண்டும். இதில் இருக்கும் வைட்டமின்  மற்றும் தனிமங்கள் முடியைப் பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் மாற்றுகின்றன


No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages