இதற்கு_என்ன_பெயர்...? - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, 28 November 2017

இதற்கு_என்ன_பெயர்...?

இதற்கு_என்ன_பெயர்...?

இரவு பதினொரு மணி இன்னுமா தூங்கல அமீனா என்ற கணவனின் குரலுக்கு மறு ஒலி மனைவியின் பாசம் அங்கே சித்தரிக்கப் படுகிறது. விடிந்ததும் மகளுக்கு பாடசாலையில் அன்னை பற்றிய உரை அன்னையர் தின நிகழ்வில். ஆடை உடுத்தி அழகு பார்க்கிறாள் அன்னை கை தட்டல்களையும் கற்பனை செய்து பார்க்கிறாள். இந்த பத்து வயது மகளின் உணர்வுகளை தன் தாயைவிட வேறு யாரால் உணர முடியும்.

கண் மூடவில்லை விழிப்பதர்க்கு. காலை கணவனிடம் கட்டாயப்படுத்தி சொன்னாள் மக்கள் மேடையில் பேசும்போது அந்த இடத்தில் நீங்கள் இருக்கவேண்டும் என்று. ஏற்றுக்கொண்ட கணவனுடன் அமர்ந்திருந்தாள் அமீனா. அடுத்து மகள் சுமையாவின் உரை மேடை நோக்கி விரைந்த மகளைப் பார்த்த அமீனா. 
     வினோத உடைப் போட்டியில் தான் பிச்சைக்காரி வேசம் போட்டு பாராட்டு வாங்கிய ஞாபகம் இலேசாக  இளையோடியது. அவள் வீட்டில் உடுத்தும் ஆடைதான் அன்றைய பாராட்டிற்கும் முழுக் காரணம். ஆனால் தன் மகளின் ஆசைகளைப் புரியும் இவள் பூர்திசெய்து மகள் அசைவுகளை ரசிக்கிறாள்.  அழகான பேச்சு ஆரவாரக் கை தட்டல்கள்  பாராட்டும் பரிசும் பெற்ற மகளைக் கட்டி அனைத்து முத்தமிட்ட அமீனாவின் கணவன் வேலைக்குப் புறப்பட்டான். 

அமீனாவைச் சூழ்ந்த ஆசிரியர்களின் கேள்விகள் அவளின் காதுகளை நிரப்பியது வலப்புறம் மகளை இறுகப் பிடித்த அமீனா பேச ஆரம்பித்தாள். 

நான் என் மகளுக்கு ஒரு தாயாக என்ன செய்ய முடியுமோ அதைத்தான் செய்கிறேன். விலை உயர்ந்த விளையாட்டு பொருட்களை கொடுத்து நான் அவளை தனிமைப் படுத்தவில்லை அவள் எதிர்பார்ப்புகளும், ஆசைகளும், கற்றுக்கொள்ளும் ஆர்வமும் மிக விசாலமானது அவை எந்த ஜடப் பொருளினாலும் பூர்த்தியாகாது தாயின் புரிதல் ஒன்றைத் தவிர. நான் அவளை நன்றாக வளர்க்கிறேன் என்பதை விட சூழல், எதிர்காலத்திற்கு ஏற்றவாறு வடிவமைக்கிறேன் என்பதுதான் இந்த இடத்தில் பொருத்தமானது. தொலைபேசி, தொலைக்காட்சிகளுக்குள்  குழந்தைகளை அடிமையாக்கிவிட்டு எங்கள் அன்பைப் புரியவில்லை என்று பெற்றோர் புலம்புவது என்னைப் பொறுத்தவரை முட்டாள் தனமானது. என விறைத்த குரலில் உரக்கப்பேசும் அமீனாவின் நிஜ வாழ்க்கை உருக்கமானது. 

குடிகாறத் தந்தை, வீடித்தொழில் வீடு வீடாக கூலித்தொழில் செய்யும் தாய், வாப்பாவின் பெயரைக் காப்பாத்தும் வெட்டிமகன் மூத்தவன், இரண்டாம் பெண் மகளான அமீனாவுக்கு அன்று பத்து வயது இருக்கும் படிக்க ஆர்வம் இருந்தும் குடும்பச் சுமைகூட அவளின் தலையிலும் ஏற்றி வைக்கப்பட்டிருந்தது.  அதிகாலையே அமீனாவை எழுப்பிய தாய் கூலி வேலைக்குப் புறப்பட்டுவிடுவார். வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் முடித்தபின் ஒவ்வொரு காலையும் தேயிலையோடு வாப்பாவை எழுப்பிவிடும் அமீனா அவரின் அகல விரிந்த கால்களைச் சரிசெய்வதும், மூலையில் கிடக்கும் சாறனை எடுத்து அவரின் நிர்வாண உடலை மறைத்துப் போர்த்திவிடுவதும் வழக்கமாக்கிக் கொண்டாள். 

அவள் வீட்டில் அதிகமான நேரம் தனிமையில்தான் இருப்பாள் மூன்று அறை வீடு அதிலொன்று குசினி கதவுகள் என்னவோ உம்மாவின் பழைய புடவைகள். ஒருநாள் ஆடை மாற்றும்போது மாமா வந்து கதவுச் சீலையை ஒதிக்கி உம்மா எங்க இன்னுமா வரல்ல..? சரி நீ என்ன செய்யிற என்றவாறு அவள் அங்கங்களை அனுமதி இன்றி அடிக்கடி தொட்டுப்பார்ப்பான். அவள் கையைப் பிடித்து தன் மடிமீது அமர்த்துவதும், வலுக்கட்டாயமாக பிடித்து மடியில் இருக்க வைப்பதும் இவன் வழக்கம். இவனுடைய சல்லாபங்களை உம்மாவிடம் சொல்ல பயந்த அமீனா என்ன செய்வது அவட தம்பியப்பத்திச் சொன்னா ஏற்றுக்கொள்ளவா போறா..! மறுகா வெள்ளிக்கிழம அவன் வாங்கித்தாற கோழி எறச்சி நிண்டுடும் உம்மாக்கு அத்தான பெரிசி என்றவளாக மனதுக்குள் புழுங்கிக்கொண்டு அக்குள் தெரியும் விசாலமான ஓட்டையை ஊக்கினால் குத்தி மூடிவிட்டு  கோழிக்கி தீன் வாங்கப் புறப்பட்டாள்.

இவளுக்கு பிறகு வந்தவர்களை அனுப்பிய கடைக்காறன் இவளுக்கு மட்டும் ஜொள்ளுவிடும் சல்லாபப் பேச்சை அள்ளிச் சாதாரணமாகவே கொடுத்துக்கொண்டு இருந்தார். கடையருகில் வந்த பக்கத்து வீட்டு ஆட்டோ அங்கிள் நான் வீட்டதான் போகப்போறன் வாறயா வீட்ட உர்ரன் என்றவுடன் தலையாட்டியவள் கோழித்தீனோடு ஆட்டோவில் ஏறும்போதே நடுக் கண்ணாடியை அவள் மார்பு தெரியும்படி செரிசெய்துகொண்டார் அந்த ஆட்டோ அங்கிள். கடைக்காறன் முடித்துவைத்த சல்லாபக் காமக் கேள்விகளை அதே இடத்திலிருந்து இவர் ஆரம்பித்தார். வீட்டையும் தாண்டி இரண்டு விதிகள் மேலதிகமாகவே சுற்றியது ஆட்டோ. அக்குளை மறைக்கக் குத்திய ஊக்கிற்கு அவ்வளவாக மறைக்கத் தெரியவில்லை. "அழகான மச்சம் ஒரு மறைவான இடத்தில்" என்று காமவரிக் கவிதை சொன்ன ஆட்டோ அங்கிள் ஏதோ தொலைத்தவனைப் போல சிரித்துக்கொண்டு நகர இவள் அக்குளை இறுகப் பொத்திக்கொண்டு ஆட்டோவிலிருந்து இறங்கியவள் வீட்டிற்குள் நகர்ந்தாள். 

உம்மா ஊடு வந்திட்டு எறங்குங்கோ  என்ற மகள் சுமையாவின்  சத்தத்தில் பதட்டத்துடன்  இறங்கி வீட்டினுள்  நுழைகிறாள் அமீனா. 
ஓ.... இன்னைக்கு உங்கட மாமியாக்கள் சாப்பாட்டுக்கு வாற எண்டு சொன்னாங்க என்றவாறே தடபுடலாக சமைக்க ஆரம்பித்தாள் அமீனா மகளின் பரிசுப்பொதியும் மாமி குடும்பத்தைக் காத்துக்கொண்டு சாப்பாட்டு மேசையிலேயே இருக்கிறது....

தொடரும்...

GAF ஆசிரியர்

5 comments:

  1. சமகாலத்தில் நடக்கும் உண்மைகள்

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் தொடர்ந்தும் இணைந்திருங்கள்

      Delete
  2. அடுத்த தொடருக்கா காத்திருக்கிறோம்

    ReplyDelete
  3. மிக்க நன்றி...
    தொடரும் வாசகர்களுக்காக

    ReplyDelete
  4. காத்திரிக்கிறோம் நாங்களும்

    ReplyDelete

Post Bottom Ad

Pages