பெருத்துப்_போன_ஓநாய்க்_குட்டி கள்.
ஏன் இந்த மனிசங்க இப்படி இருக்காங்க...? என்னடா சொல்லுற இருட்டாயிட்டு வீட்ட போகாம இங்க ஆலமரத்தடிய குந்திக்கு புலம்புற...
....எப்போதும் கவலை சந்தோசம் எதுவாக இருந்த்தாலும் காசிம் அந்த ஆல மரத்தடியில்தான் நண்பர்களுடன் பகிர்வான் அவனுக்கு ஏழு வயது இருக்கும் வீதியில் வளைந்திருக்கும் கோப்புகள் இடைஞ்சல் என்று மரத்தையே தறிக்கவந்த ஊர்ரார்களிடம் அப்படியன்றால் கந்தைத் தறியுங்கள் ஏன் மரத்தை தறிக்கப் போறிங்க நான் விடமாட்டன் உசுர் போனாலும் பறவால்ல என்று அவன் வாப்பா காப்பாற்றிய மரம் அது.
இல்லடா மச்சான் இந்த ஊருல நடக்குற காட்சிகள பாத்தா பத்துதுடா... உதட்டை கடித்து குனிந்தவாறே சொன்னான்.
என்னடா மச்சான் காந்தி மாதிரி பேசுற அப்படி என்ன அனியாத்தக்கண்டாய்...? கேள்வி எழுப்பிவிட்டு சௌகரீகமாக அமர்ந்து கொண்டார் அபுபக்கர்.
டேய் அபு உனக்கும் தெரியும் தான அந்த சில்லறக்கடக்கி பக்கத்து ஊடுப்புள்ளட கல்யாண மேட்டர். ஓம் இப்ப என்ன புருசங்காரன் ஓடிட்டானா உட்டுட்டு...ஹா.ஹா.ஹா..
நான் சீரியசா கதக்கன் நீ என்னடா சிரிக்கிர
அவன் ஓடினாலும் பறவால்ல அந்த பொன்ன கட்ட அவன் பட்ட அவமானம் கொஞ்ச நஞ்சமா.
மாப்பிள்ள வீடுக்காரங்கதான் சீதனம் கேட்டுப் பொன் வீட்டுல சண்ட போடுவாங்க அங்க என்னடா எண்டா அந்த பொண்ணையன் பொன்ன கட்டிகொடுக்க மகரக் கூட்டித் தா எண்டலாடா மாப்புள்ள வீட்டுக்கு போய் சத்தம் போட்டிருக்கான்.
அது மட்டுமா..! கொண்டு வந்த கூறப்பொட்டிக்க சாமான் காணா எண்டு சொல்லியுமிருக்கான்.
மாப்புள்ளைக்கிட்ட வீடு தாறன் எண்டு சொல்லி லோன் எடுத்து பீக்காட்டுக்க ஒரு வளவுத்துண்டு வாங்கி ஏதோ மெயின் றோட்டுல வாங்கினாப்போல பீத்திக்கி ரெண்டு அறயும் கக்கூஸ் பாத்துறுமும் கட்டினான். இப்ப பொண்டாட்டிர கதையக் கேட்டு அந்த ஊடு வளவ கொடுக்காம வாளவேண்டிய புள்ளங்கள நடு றோட்டுல தொரத்தியிருக்கான்.
அதத்தான் இப்ப கேட்டு காறித் துப்பிப்போட்டு வாறன் அந்த நாய..
பெரிசா நானும் கௌமண்ட் ஜொப்பு எண்ட மருமகப்புள்ளையும் கௌமண்ட் ஜொப்பு எண்டு பெரிசா பீத்திட்டு இப்ப என்னடா பண்ணியிருக்கே.
கைப்புள்ள எண்டும் பாக்காம பெத்த தாய்க்கிட்ட இருந்து பிரிச்சிக்கு வந்து பொம்புள புள்ளைய கஸ்ட்டப்படுத்தி மறுகா புள்ளைய வளக்க தாய் வேனும் எண்டு புள்ளட சாட்டுல அடுத்த கல்யாணம் முடிச்சி புள்ளைய சித்திக் கொடுமையும் அனுபவிக்க வச்சு இப்ப புள்ளைக்கும் கல்யாணம் முடிச்சுக் கொடுத்திட்டு அத சந்தோசமா வாள உடாம உண்ட நாய்ப் புத்திய காட்டியிருக்கையடா நீயல்லாம் ஒரு ஆம்புள எண்ட மொகத்துலையும் முழிக்காத எண்டு சொல்லிட்டு வந்திட்டன் அபு.
ஹா... சரியாத்தான் சொல்லியிருக்க நாம பொம்புள புள்ளையள வச்சுக்கு கரையேத்தப் பர்ர பாட்டுக்க இப்படியா செய்றது மாப்புள்ளக்காறன் நல்லவன் எண்டத்தால ஓகே இல்லன்னா அந்த புள்ளட வாள்க..
டே..காசீம் சொந்த வாப்பாவே கவலபடல நாம ஏண்டா... வா இஸ்ஸாக்கும் பாங்கு செல்லிட்டு ஒரிமிக்க தொழுதுக்கு ஊட்ட போவோம்.
தொழுகையோடு முடிந்துவிடவில்லை...
தொடரும்.
Gaf ஆசிரியர்




No comments:
Post a Comment