உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான 492 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் 23 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அதிகாரம் பெற்ற அதிகாரிகளிடம் மாத்திரமே வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். வேட்பு மனுக்களை முறையான விதத்தில் பூர்த்தி செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அரசியல் கட்சிகளையும், சுயேட்சைக்குழுக்களையும் கேட்டுள்ளார்.
தேர்தல் சட்டத்திற்கு அமைவாகவே சில வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்; கூறினார்.
பதாதைகள், சுவரொட்டிகள் என்பனவற்றை அகற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.




No comments:
Post a Comment