ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு பல்வேறு வகையிலான நிதியுதவிகளை வழங்கிவருகின்றது. அந்த வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான நிதியில் இலங்கை இளைஞர்களின் ஆரம்ப திட்டத்திற்காக 12 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஐக்கிய நாடுகள் இலங்கைக்கு வழங்கியுள்ளது.
இத்திட்டம் தொடர்பில் இலங்கை ஐக்கிய நாடுகள் சபைக்கு ஏற்கனவே நிதியுதவியினை கோரியிருந்தது. அதற்காக ஐக்கிய நாடுகள் சபையால் இரண்டு கட்ட நிதியுதவி வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மூன்றாம் கட்ட நிதியுதவியாகவே இந் நிதித் தொகை வழங்கப்பட்;;டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையுடன் இலங்கை சுமூகமான உறவைப் பேணி வருகின்றது. இந்நிலையில் ஐ.நா சபையினால் இலங்கைக்கு வழங்கப்படும் பல்வேறு நிதியுதவிகளை தொடர்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை இளைஞர்களின் ஆரம்ப திட்டத்தின் கீழ் பெண்கள் ஊக்குவிப்பு மற்றும் நிலைபேறான நல்லிணக்க திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அதன் படி பெண்கள் ஊக்குவிப்பு மற்றும் நிலையான நல்லிணக்கத் திட்டம் என்பவற்றுக்காக ஐக்கிய நாடுகள் சபையால் வழங்கப்பட்டுள்ள இந் நிதித் தொகை செலவிடப்படவுள்ளது.
இத் திட்டம் தொடர்பில் இலங்கைக்கு ஏற்கனவே 7 இலட்சத்து 50 அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment