இலங்கையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் தற்போது வரையான காலப்பகுதியில் 180,988 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக இலங்கை தொற்று நோய் தடுப்பு பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இவ்வறிக்கையின்படி சுமார் நூற்றுக்கு 41.57 வீதமான டெங்கு நோய் தாக்கம் மேல் மாகாணத்திலேயே பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். இம் மாவட்டத்தில் சுமார் 33,660 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதேவேளை கம்பஹா மாவட்டத்தில் 31,095 நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 10,497 நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 14,099 நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர். ஏனைய மாவட்டங்களில் சராசரியாக 500 தொடக்கம் 3000 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இலங்கையில் அவதானிக்கப்பட்டுள்ள இந்நிலைமையானது நுளம்புகள் பரவும் வகையிலான சூழலை ஏற்படுத்தாதிருத்தல் வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுவதோடு இந் நோய் நிலைமையில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதையும் உணர்த்துகின்றது.
மேலும் டெங்கு நோய்க்கான அறிகுறிகள் பற்றிய தெளிவினை மக்கள் பெற்றிருப்பதோடு நோய் நிலைமை வராமல் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ளவேண்டும். அதேவேளை நோய் ஏற்படும்
சந்தர்ப்பத்தில் அதனை குணப்படுத்துவதற் காக உரிய முறையில் சிகிச்சைகளை பெற வேண்டியதும் அவசியமாகும்.
No comments:
Post a Comment