உடல்நிலை மோசமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த எதிர்க் கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் இன்று வீடு திரும்புவதற்கு வைத்தியர்கள் அனுமதியளித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் அறிவித்துள்ளன.
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் திருகோணமலையில் இருந்து கடந்த வியாழக்கிழமை கொழும்பு திரும்பியிருந்த நிலையில் அன்றைய தினம் முற்பகல் சுகயீனம் காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந் தார்.
வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைகளை பெறுவதே சிறந்தது என்று வைத்தியர்கள் வழங்கிய ஆலோசனைக்கு அமைவாக தொடர்ச்சியாக நேற்று ஞாயிற்றுக்கிழமை வரையில் நான்கு தினங்களாக மருத்துவ சிகிச்சைகளை பெற்றிருந்தார்.
இந் நிலையில் அவருடைய உடல் நிலை தொடர்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமையும் வைத்தியர்கள் கவனம் செலுத்தினார்கள். இதன்போது அவரின் உடல் நிலைமை முன்னேற்றமடைந்ததையடுத்து இன்று வீடு திரும்புவதற்கு அனுமதி வழங்கியுள்ளனர். குறிப்பாக அண்மைய தினங்களாக சளித்தொல்லை காரணமாகவே எதிர்க்கட்சித்தலைவரின் உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment