ரஷ்ய- இலங்கை இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 60 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அரசாங்கத்தினால் வெளியிடப்படவிருந்த சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் விநியோகிக்கத் திட்டமிடப்பட்டிருந்த இந்த அஞ்சல் தலையை இடைநிறுத்தி வைக்குமாறு வெளிவிவகார அமைச்சு அறிவுறுத்தியிருப்பதாக தெரியவருகின்றது.
இலங்கை தேயிலைக்கு ரஷ்யா தற்காலிக தடையை விதித்துள்ள நிலையில், இருதரப்பு இராஜதந்திர உறவுகளில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ள சூழலிலேயே, சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, இலங்கையுடனான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்ட 60 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இரண்டு அஞ்சல் தலைகளை ரஷ்யா கடந்த வாரம் வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment