ஆசியாவின் முதலாவது சுற்றுலாத் திட்டமாக பெந்தர - தேத்துவ சுற்றுலாத் திட்டம் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
சர்வதேச முதலீட்டாளர்களிடம் இருந்து கேள்விப்பத்திரங்கள் தற்போது கோரப்படுவதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உலகில் உள்ள செல்வந்த சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் பெந்தர -தேத்துவ வலயத்ரை தரமுயர்த்துவது இதன் நோக்கமாகும்.
1800 ஏக்கர் காணி அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது. காணி உரிமையாளர்களுக்கு நஷ்ட ஈட்டைவழங்கும் பணிகள் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ன.
சுற்றுலா பயணிகளுக்கத் தேவையான ஆடம்பர சுற்றுலா ஹோட்டல்கள், தங்குமிடங்கள், கொல்வி விளையாட்டு மைதானம், குதிரைப் பந்தயத் திடல் உள்ளிட்ட பொழுதுபோக்கிற்குத் தேவையான பல பிரிவுகளையும் கொண்டதாக இந்த வலயம் அமைய உள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் நேரடியாக பல தொழில்வாய்ப்புகளுக்கான சந்தர்ப்பங்களும் கிட்டும் என்றும் அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment