அத்தியாவசிய உணவுப் பொருட்களை நிலையான மற்றும் நிவாரண விலையில் நுகர்வோருக்கு வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
புத்தாண்டுக் காலத்திற்கு மாத்திரம் இதனை வரையறுக்காமல் தொடர்ந்தும் முன்னெடுப்பதே இதன் நோக்கமாகும் என்று கூட்டுறவு மொத்த விற்பனை ஸ்தாபனத்தின் தலைவரும் சதொச நிறுவனத்தின் பதில் தலைவருமான மொஹமட் றிஸ்வான் ஹமீன் தெரிவித்துள்ளார்.
இதுவரையில் 500ற்கு மேற்பட்ட பொருட்களின் விலைகள் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரிசி, சீனி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய 7 உணவுப் பொருட்கள் விசேட விலையின் கீழ் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்தப் பொருட்களை உரிய விலைக்கு விற்கத் தவறும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ள விசேட குழுக்கள் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அம்பன்பொல, அத்திட்டிய, அம்பலாந்தொட்ட, ஹல்லால்ல, சூலவத்த, பனாகல, சித்தமுல்ல மற்றும் ஊராபொல ஆகிய இடங்களில் இன்று புதிதாக 10 விற்பனை நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் சதொச விற்பனை நிலையங்களின் எண்ணிக்கையை 300 ஆக அதிகரிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment