உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில் எதிர்வரும் 28ஆம் திகதி மற்றும் 29ஆம் திகதிகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இருவேறு முக்கிய கூட்டங்கள் நடைபெறவுள்ளன.
28ஆம் திகதி பண்டாரநாயக்கா ஞாபகா ர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்கும் விசேட கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளது. இதன்போது உள்ளூராட்சி மன்றங்களை வெற்றி கொள்வதற்காக பங்காளிக்கட்சிகளுடன் கூட்டாக சுதந்திரக் கட்சி முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதோடு திட்டமிடல்கள் சிலவும் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதேவேளை மறுதினமான 29ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பாளர்கள் அனைவரும் பங்கேற்கும் விசேட கருத்தரங்கொன்றும் நடைபெறவுள்ளது.
சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெறவுள்ள இந்த கருத்தரங்கிற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்கவுள்ளார். இதன்போது உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை சிறப்பாக முகங்கொடுப்பது தொடர்பாகவும், கட்சியின் கொள்கை விடயங்களையும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரதான தொனிப்பொருள் மற்றும் பரப்புரைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட வுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment