ஒரே மாதத்தில் 300க்கும் அதிகமானோர் முன்பதிவு செய்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday 20 December 2017

ஒரே மாதத்தில் 300க்கும் அதிகமானோர் முன்பதிவு செய்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

எலெக்ட்ரிக் மோட்டார்சைச்கிள் நிறுவனமான ஒகினவா இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்த ஒகினவா பிரெய்ஸ் ஸ்கூட்டரை ஒரே மாதத்தில் 300க்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.
ஒரே மாதத்தில் 300க்கும் அதிகமானோர் முன்பதிவு செய்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்


புதுடெல்லி:
எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான ஒகினவா ஆட்டோடெக் தனது ஃபிளாக்ஷிப் ஸ்கூட்டர்- ஒகினவா பிரெய்ஸ் மாடலை சமீபத்தில் அறிமுகம் செய்திருந்தது. 

இந்தியாவில் ரூ.2000 மட்டும் செலுத்தி முன்பதிவு செய்யப்பட்ட ஒகினாவா பிரெய்ஸ் ஒரே மாத காலத்திற்குள் 300க்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர். அறிமுகம் செய்யும்வரை புதிய ஸ்கூட்டரின் புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் எதுவும் வெளியிடப்படாமல் இருந்தது. 

இந்த ஆண்டு துவக்கத்தில் என்ட்ரி-லெவல் ஸ்கூட்டரை அறிமுகம் செய்திருந்த ஒகினவா தற்சமயம் தனது இரண்டாவது ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் புதிய ஒகினவா பிரெய்ஸ் விலை ரூ.59,889 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
கீலெஸ் ஸ்டார்ட், ரிமோட் லாக்கிங், ஆன்டி-தெஃப்ட் ஃபன்க்ஷன் மற்றும் சைடு ஸ்டான்டு சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் இயக்கப்பட்டிருக்கும் நிலையில், வாகனத்தை ஸ்டார்ட் செய்ய முடியாது. இத்துடன் எல்இடி ஹெட்லேம்ப் டி.ஆர்.எல். மற்றும் எல்இடி இன்டிகேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளது.

மற்ற அம்சங்களை பொருத்த வரை ஒகினவா பிரெய்ஸ் 12 இன்ச் ஸ்மார்ட் அலாய் வீல், 90/90 MRF டியூப்லெஸ் டையர்கள் வழங்கப்படுகிறது. முன்பக்க சக்கரத்தில் டூயல் டிஸ்க் பிரேக், பின்புறம் ஒற்றை டிஸ்க், E-ABS வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கம் ஹைட்ராலிக் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் ஹைட்ராலிக் டூயல் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்லது. இத்துடன் சீட்டின் கீழ் 19.5 லிட்டர் கொள்ளளவு வசதி வழங்கப்பட்டுள்ளது.
ஒகினவா எலெக்ட்ரிக் வாகனத்தின் மோட்டார் 72V/45 Ah VRLA, 2500 வாட் திறன் கொண்ட பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 3.34 பி.எச்.பி. பவர் கொண்டுள்ளது. மூன்று - எகனாமி (மணிக்கு 35 கிலோமீட்டர்), ஸ்போர்டி (மணிக்கு 65 கிலோமீட்டர்) மற்றும் டர்போ (மணிக்கு 75 கிலோமீட்டர்) உள்ளிட்ட மோட்களில் கிடைக்கிறது. இந்த பேட்டரியை 6 முதல் 8 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும்.

இத்துடன் குறைந்த எடை கொண்ட லித்தியம் அயன் பேட்டரியை ஒகினவா அறிமுகம் செய்துள்ளது. இந்த பேட்டரி ஸ்கூட்டரின் திறனை 10 முதல் 15 சதவிகிதம் வரை அதிகரித்திருப்பதோடு 1-2 மணி நேரத்திற்குள் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும். 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages