எதிர்வரும் பெரும் போகங்களில் விவசாயிகளின் நலன் கருதி நெல் அடங்கலாக 6 வகை உற்பத்தி பொருட்களுக்கு புதிய காப்புறுதி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விவசாய தானிய காப்புறுதிச் சபை அறிமுகப்படுத்தியுள்ள இந்த காப்புறுதித் திட்டத்தில் நெல் ,பெரிய வெங்காயம் ,சோளம் ,உருளைக்கிழுங்கு, சோயா அவரை, மிளகாய்( பச்சை) உள்ளிட்டவற்றின் ஒரு ஏக்கர் உற்பத்திக்கு விவசாயி ஒருவரினால் காப்புறுதி பெற்றுகொள்ள முடியும்.
இதுதொடர்பில் காப்புறுதிச் சபையின் தலைவர் சிட்னி கஜநாயக்க தெரிவிக்கையில், விவசாயிகள் காப்புறுதிக் கட்டணமாக 625ரூபாவை வருடாந்தம் செலுத்தவேண்டும்.
வருடாந்த மொத்த கட்டணத்தில் 80 சதவீதத்தை அரசாங்கம் செலுத்துவதாக தெரிவித்த காப்புறுதி சபை தலைவர் இது தொடர்பாக விவசாயிகளை இத்திட்டத்தில் பதிவு செய்யும் நடவடிக்கை தேசிய ரீதியில் நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார்.
இந்த திட்டத்தின் கீழ் 27 இலட்சத்து 51ஆயிரத்து 140 ஏக்கர் நிலப்பரப்பில் உற்பத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன் இந்த 6 உற்பத்தி பொருட்களுக்கு காப்புறுதியாக 825 கோடியே 37 இலட்சத்து 32 ஆயிரம் ரூபா காப்புறுதி தொகையாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment