தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் 6-வது இடத்திற்கு ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வருகிற 5-ந்தேதி கேப்டவுனில் தொடங்குகிறது. போட்டி தொடங்க இன்னும் 7 நாட்கள் மட்டுமே உள்ளதால், அணியில் யார் யாருக்கு இடம் கிடைக்கும். யார் சிறப்பாக விளையாடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
இந்தியா - இலங்கை இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சமீபத்தில் முடிந்தது. இதில் இந்தியா 1-0 என வெற்றி பெற்றது. இந்திய அணியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஹர்திக் பாண்டியா இடம்பிடித்து விளையாடி வந்தார்.
இலங்கை தொடரின்போது அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. இந்தியா நான்கு பந்து வீச்சாளர்கள் மற்றும் 6 பேட்ஸ்மேன்களுடன் விளையாடியது. 6-வது பேட்ஸ்மேனாக ரோகித் சர்மா களம் இறங்கினார். நாக்பூரில் நடைபெற்ற டெஸ்டில் சதம் அடித்தார். டெல்லியில் அரைசதம் அடித்தார்.
தென்ஆப்பிரிக்கா மண்ணில் இந்திய பேட்ஸ்மேன் வழக்கமாக திணறுவார்கள். இதனால் பேட்டிங்கை வலுப்படுத்த 6 பேட்ஸ்மேன்களுடன் இந்தியா களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி 6 பேட்ஸ்மேன்களுடன் இந்தியா விளையாடினால் நான்கு பந்து வீச்சாளர்கள்தான் இடம்பெற முடியும்.
அஸ்வின் அல்லது ஜடேஜா ஆகியோர் ஒரு சுழற்பந்து வீச்சாளர் களம் இறங்குவார்கள். மொகமது ஷமி, இசாந்த் சர்மா, உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார், பும்ரா ஆகியோரின் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் களம் இறக்கப்படுவார்கள்.மூன்று பேரில் இரண்டு பேரை களமிறக்கினால் மட்டுமே ஹர்திக் பாண்டியாவை களம் இறக்க வாய்ப்புள்ளது. மேலும் மூன்று வேகப்பந்து வீச்சாளருடன் வேகபந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா அணிக்கு தேவைப்படும் என்றால் ஹர்திக் பாண்டியா களம் இறக்கப்படுவார்கள்.
அப்படி ஹர்திக் பாண்டியா களம் இறக்கப்பட்டால் ரோகித் சர்மாவிற்கு இடம் கிடைக்காது. இதனால் 6-வது இடத்திற்கு ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா இடையே கடும் போட்டி நிலவி வருகிறது
No comments:
Post a Comment