மலையக தோட்டப்பாடசாலைகளின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday 20 December 2017

மலையக தோட்டப்பாடசாலைகளின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை

மலையக தோட்டப்பாடசாலைகளின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை
கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தலைமையிலும் கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன் வழிகாட்டலிலும் மலையகத்திலுள்ள தோட்டப்பாடசாலைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கு துரிதமான நடவடிக்கை கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைவாக மத்திய ,மேற்கு ,ஊவா ,தெற்கு மற்றும் சப்ரகமுவ உள்ளிட்ட ஐந்து மாகாணங்களில் தேவைகளைக் கொண்ட தோட்டப்பாடசலைகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பாடசாலைக்கட்டடங்களை நிர்மாணித்தல் , புனரமைத்தல், ஆசிரியர் விடுதிகளை அமைத்தல் மற்றும் புனரமைத்தல் விஞ்ஞான மற்றும் கணனிக்கூடங்களை நிர்மாணித்தல் , குடிநீர் வசதியை ஏற்படுத்திக்கொடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் இதன்கீழ் மேற்கொள்ளப்படுகின்றன.

இதேபோன்று இந்த பாடசாலைகளுக்காக வகுப்பறை மற்றும் அலுவலகங்களுக்கான உபகரணங்களை வழங்குவதற்கும் வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் தேவைகளைக்கொண்ட 32 பாடசாலைகள் அடையாளம் காணப்பட்டதுடன் அவற்றிற்கு மடிகணனி, பிரதிஇயந்திரம் முதலானவை கல்வி அமைச்சர் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன் ஆகியோர் தலைமையில் இதுதொடர்பான நிகழ்வு இடம்பெற்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages