நாட்டின் ஊடாக வடகிழக்கு பருவப்பெயர்ச்சி காலநிலை வலுவடைந்திருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday 20 December 2017

நாட்டின் ஊடாக வடகிழக்கு பருவப்பெயர்ச்சி காலநிலை வலுவடைந்திருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


Image result for காலநிலை 
நாட்டின் ஊடாக வடகிழக்கு பருவப்பெயர்ச்சி காலநிலை வலுவடைந்திருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக பெரும்பாலான பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு ,ஊவா மற்றும் தென்மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்தின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றருக்கு மேற்பட்ட மழைவீழ்ச்சி இடம்பெறக்கூடும்.


மன்னாரிலிருந்து காங்கேசன்துறை ,திருகோணமலை, பொத்துவில் மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையிலான கடற்கரையோரங்களில் மழை அல்லது இடியுடன்கூடிய மழைபெய்யும்.


பெரும்பாலன கடற்கரையோரங்களில் மாலை மற்றும் இரவுவேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் . வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாத்தறை மாவட்டங்களிலும் 50 கிலோமீற்றர் வரையிலான காற்று வீசக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுக்கூடும். இடிமின்னலிலிருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages