பிரான்சில் தயாரிக்கப்பட்ட A - 380 எயார் பஸ் விமானம் இன்று அதிகாலை அவசரமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
உலகில் இதுவரை தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய பிரான்ஸ் பயணிகள் விமானம் இன்று அதிகாலை 2.50 மணியளவில நியூசிலாந்து ஒக்லாந்து நகரில் இருந்து டுபாய் நோக்கி பயணித்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் நடுவானில் வைத்து விமானத்தில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக விமானி அறிந்து கொண்டுள்ளார்.
அதற்கமைய கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளிடம் அறிவித்து விமானத்தை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
400 பயணிகள் மற்றும் 30 ஊழியர்கள் குறித்த விமானத்தில் பயணித்துள்ளனர். இந்த விமானத்திற்கு ஜெட் A- 1 ரக எரிபொருள் 30000 லீற்றர் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதிகாலை 4.30 மணியளவில் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து டுபாய் நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.
இந்த விமானம் எமிரேடைஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானங்களில் ஒன்றாகும். இவ்வாறான நூறுக்கு அதிகமான விமானங்கள் அந்த விமான நிறுவனத்திடம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment