தென்ஆப்பிரிக்கா அணியால் எங்களுக்கு நெருக்கடி கொடுக்க முடியும் என்றால், எங்களால் அவர்களுக்கும் நெருக்கடி கொடுக்க முடியும் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வருகிற ஐந்தாம் தேதி தொடங்குகிறது. இதற்காக இந்திய அணி நேற்றிரவு தென்ஆப்பிரிக்கா புறப்பட்டுச் சென்றது.
இந்திய அணி புறப்படுவதற்கு முன்பு அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, அணி கேப்டன் விராட் கோலி ஆகியோர் பேட்டியளித்தனர்.
அப்போது, இந்திய அணிக்கு தென்ஆப்பிரிக்காவில் கடும் சவால் காத்திருக்கிறது. அதை எதிர்கொள்ள ஆர்வமாக உள்ளனர் என்றார். இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறுகையில் ‘‘தென்ஆப்பிரிக்கா ஆடுகளத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறுவார்கள் என்றால், எங்களாலும் தென்ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க முடியும்.
அனைவரும் இதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தென்ஆப்பிரிக்கா தொடர் சவாலாக இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், ஒவ்வொரு வீரர்களுக்கும் அழகானது’’ என்றார்.
No comments:
Post a Comment