உடல் ஆரோக்கியம் காக்கும் நடைப்பயிற்சியின் வகைகள். - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, 29 December 2017

உடல் ஆரோக்கியம் காக்கும் நடைப்பயிற்சியின் வகைகள்.

உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மிகவும் நல்லது. அந்த வகையில் எந்த வித நடைப்பயிற்சி என்ன பலனை தரும் என்று பார்க்கலாம்.உடல் ஆரோக்கியம் காக்கும் நடைப்பயிற்சியின் வகைகள்நடைப்பயிற்சியில் மூணு வகைகள் உண்டு.

• அடுத்து பவர் வாக்கிங்னு சொல்ற வேக நடை. கைகளையும் கால்களையும் வேகமா வீசி நடக்கிறது. இப்படி வேகமா நடக்கிறப்ப, உடம்புல உள்ள கழிவுகள் விரைவாக எரிக்கப்படும். வியர்வை அதிகம் வெளியேறி, உடம்பு சுத்தமாகும். தசைகளும் எலும்புகளும் அதிக வலுவைப் பெற்று, தன்னம்பிக்கையை உயர்த்தி, உடம்புக்கு அதிக சக்தியைக் கொடுக்கும் இந்த நடை. நீரிழிவுக் காரர்களுக்கு ஏற்ற நடைபயிற்சி இது.

• மூணாவது ஜாகிங்னு சொல்ற மெதுவான ஓட்டம். வேகமா நடக்கிறவங்க, சில மாசங்களுக்குப் பிறகு வேகத்தைக் கொஞ்சம் கூட்டும் போது மிதமான, மிக மிக மெதுவான ஓட்டமா அது மாறும்.

இதனால நிறைய ஆக்சிஜன் நுரையீரலுக்குள்ள போய், அதன் விளைவா இதயத்துக்கு அதிக சுத்த ரத்தத்தை அனுப்பி, தேவையில்லாத அத்தனை கழிவுப் பொருள்களையும் வெளியேற்றி, உடம்புல உள்ள ஒவ்வொரு அணுவையும் சுத்தம் செய்யும். இள வயதுக்காரங்களுக்கு ஏற்ற நடை இது.

தினமும் அரை மணி நேரத்துலேர்ந்து 1 மணிநேரம் வரை நடக்கலாம். இளவயசுக்காரங்க 1 மணி நேரமும், 30-40 வயசுக் காரங்க 45 நிமிடங்களும், 40 ப்ளஸ்ல உள்ளவங்க அரை மணி நேரமும், 50&60 வயசுக்காரங்க 20 நிமிடங்களும் நடக்கலாம்.

• முதல் வகை மெதுவாக நடக்கிறது. நாம எப்பவும் நடக்கிற மாதிரி எந்த ஒரு வேகமும் சிரமமும் இல்லாம சாதாரணமா நடக்கிறது இந்த வகை. உடல் வலிகளை, சோர்வுகளைப் போக்க இந்தவித நடை உதவும். மேலும் உடம்புல உள்ள தசைகளையும், எலும்பு இணைப்புகளையும் இதமாக்கி, காயங்கள் வராமலும் பாதுகாக்கும். உடல் பருமன் உள்ளவங்களுக்கு ஏற்ற நடை இது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages