#காலத்தின்_தேவையும்_கட்டாயமும் .
தனி நபரால் செய்ய முடியாமல் போனாலும் அதிகார பலத்தால் செய்யமுடியும். சற்று சிந்தியுங்கள்.
ஒரு சமுதாயத்தில் கல்வி எந்த அளவு முக்கியத்துவம் வகிக்கிறது...? ஒவ்வொரு ஆசிரியர்களும் பாடசாலைகளில் கடமைக்காக கற்பிக்காமல் மாணவர்களின் நலன்களையும் கருத்தில் கொண்டு சிறந்த கல்வி,ஒழுக்கம், போன்றவற்றை வழங்குவது போன்று பள்ளிக்கு வெளியேயும் அர்ப்பணிப்புடன் செயற்படல் இக்கால கட்டத்தில் அவசியமாகிறது.
நம் ஊரில் பல தியாகிகள் தங்கள் கடின உழைப்பின் மூலமாக நமது ஊரை ஒரு காலகட்டத்தில் கல்வியில் சிறந்து விளங்க வைத்தார்கள். ஆனால் இன்று மனச் சாட்சி உள்ள ஒரு ஆசிரீயரை பார்க்கவேண்டும் என்றால் ஓய்வுபெற்ற சிலரை அவர்கள் வீடுகளிலேயேதான் சென்று பார்க்கவேண்டும். அரசியல் காலங்களில் மட்டும் பாடசாலைகளுக்குள் சென்று சங்கங்கள் ஆரம்பித்து வெறும் புகைப்படங்களுட முடித்துவிட்டு தேர்தல் வேலைகளை பார்க்கச் செல்கின்றனர்.
பள்ளி அபிவிருத்திக்கு முன்னால் மாணவர்கள், இளைஞர்கள், பெற்றோர்கள், முன்வருதல் அந்த பாடசாலையின் முன்னேற்றத்திற்கு அவசியமாகிறது. சுயநல போக்கு மிகைத்த இந்த காலப்பகுதியில் இவ்வாறான செயற்பாடுகள் சற்று கடினமாகத்தான் இருக்கும்.ஆனால் ஒரு ஊரில் படித்த அனுபவம் வாய்ந்த ஆளுமை ஆட்சி செய்யும்போது இவை இலகுவாகவே சாத்தியமாகும்.
சமூக வளர்ச்சிக்காகவும், பள்ளி வளர்ச்சிக்காகவும் இரவு பகல் பாராது விழிப்புணர்வுகளை வழங்கிய பொதுமக்களை ஒன்றிணைக்க வேண்டும்.
பூங்காக்கள், கட்டிடங்களால் அலங்கரித்த நம் பாடசாலைகள் சிறந்த கல்வியால் அலங்கரிக்கப்பட்டல் வேண்டும். இது மாணவர்கள் கைகளில் மாத்திரம் இல்லை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வி அதிகாரிகள், பள்ளிவாசல் நிர்வாகம், பொதுமக்கள், இவை அனைத்தையும் தாண்டி ஒரு அரசியல் அதிகாரத்தாலையே இதனை செயற்படுத்தல் சாத்தியமாகும்.
பாடசாலை உட்புறம், சுற்றுச்சூழல், சுகாதாரமான கழிவறை, ஆரோக்கியமான உணவுகளை கொண்ட உணவகங்கள் போன்றன கண்காணிக்கப்படல் வேண்டும்.
மனிதநேய பள்ளி, குழந்தை நேய பள்ளி என்று பெயர் சூட்டுவதை விட அந்த நேயம் மாணவர்களுக்கு காட்டப்படல் வேண்டும். அதேபோல அனைத்து மாணவர்களுக்கும் ஆங்கில அறிவு பாடசாலைக்குள்ளேயே கட்டாயப்படுத்தி கற்பிக்கவேண்டும், சிறந்த கற்பித்தல் முறைகளை அறிமுகப்படுத்தி அவைகள் கற்பிக்க படுகின்றதா என்று கண்காணிக்க வேண்டும்.
ஏன் என்றால் ஒரு பள்ளி ஆசிரியர் அவர் நடத்தும் மாலைநேர வகுப்புகளில் காட்டும் அலாதியான ஆர்வம் பள்ளிக்குள்ளெயும் மாணவர்களிடம் காட்டப்படல் வேண்டும்.
வகுப்பில் பின்தங்கிய மாணவர்களிடம் மேலதிக கவனம் செலுத்தவேண்டும். வரி அறவிடுதல், அபிவிருத்தியில் கணக்கு காட்டாமல் இவ்வாறான கல்வி நடவடிக்கைகள் மீதும் கவனம் செலுத்தி பண ஒதுக்கீடு செய்து கட்டமைக்கப்பட்டல் வேண்டும்.
மேலும் மரன் நடுகை, குப்பைத்திட்டில் அமைத்தல் போல போதைப் பொருள் ஒழிப்பு, சிறுவர் பாதுகாப்பு, மாணவர் போகுவரத்து ஒழுங்குமுறை போன்ற பல பிரிவுகளுக்கு குழுக்கள் அமைக்கப்பட்டல் வேண்டும். இதில் அதிபர், ஆசிரியர், மாணவர், பொதுமக்கள், இளைஞர்கள், பெற்றோர்கள், மட்டுமல்லாது மாநகர முதல்வர் கூட இந்த குழுவில் அங்கத்துவம் வகுத்தல் அவசியம். ஒரு சமூகத்தில் இருந்து ஒருபோதும் பாடசாலை விலகிச் செல்ல முடியாது. அப்படி நடந்தால் பாடசாலை சம்மந்தமான நம்பிக்கை சமூகத்தின் பார்வையில் குறைந்து விடும். இவைகளை மாற்றியமைக்க பாடசாலை அபிவிருத்தி தொடர்பான வழிகாட்டல் நூல்கள் இவர்களுக்கு வழங்கப்பட்டல் வேண்டும்.
சில பாடசாலைகளில் சாதாரணமாக மாணவர்கள் பாடசாலைக்கு உள்ளேயே சிகரட் ( புகைத்தல்) பாவனை செய்கின்றனர். அது மட்டும் அன்றி சிறிய வயதிலேயே போதைப் பொருளுக்கு அடிமையாகி ஒழுங்கான வழிகாட்டல் இல்லாமல் சினிமா நடிகர்களை பின்பற்றி மார்க்கத்தையும், கல்வியையும் தூரமாக்கி சீரளிகின்றனர். சில அரசியல்வாதிகளும் இதற்கு காரணமாக அமைகின்றனர். இவைகளை கருத்தில் கொண்டு சீர்படுத்தல் வேண்டும்.
மட்டுமன்றி மாலைநேர வகுப்புகள் நடாத்தும் தனியார் கல்வி நிலையங்கள் ஒவ்வொன்றும் இவ்வொரு பண அலகினை மாணவர் மத்தியில் அறவிடுகின்றனர். பாடசாலை கல்வியை விட தனியார் வகுப்புகளிலேயே நம் பிராந்திய கல்வி முக்கியத்துவம் செலுத்துகிறது.
தனியார் வகுப்புகளில் பாடப்புத்தகம் படித்து முடிப்பது போன்று ஏன் பாடசாலைகளில் முடிவதில்லை..? அதே ஆசிரியர்கள் அதே மாணவர்கள் ஆனால் மாணவர்களை வியாபார நோக்கத்திற்காக தங்கள் வலையில் சிக்கவைத்து இன்று பல செட்சம். சம்பாதிக்கின்றன இந்த தனியார் கல்வி வியாபார நிலையங்கள்.
இப்படிச் சென்றால் வறுமைக் கோட்டில் வாழும் மக்களின்/ மாணவர்களின் நிலை என்னாவது...?
மாநகர முதல்வரால் இதுகூட கவனிக்கப்பட வேண்டிய ஒன்றுதான். அனைத்து தனியார் கல்வி நிலையங்களும் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கவேண்டும். அனைத்து இடங்களிலும் நிர்ணயிக்கப்பட்ட குறித்த தொகையே மாணவர்களிடம் அறவிடப்படல் வேண்டும். இதற்கு மாநகரசபை ஒருவரை நியமித்து செயற்படுத்தல் வேண்டும்.
எமது இஸ்லாமிய பெண்கள் பேருந்துகளில் வெளியூர்களுக்குச் சென்று படிக்கின்றனர். இதன்மூலம் எத்தனையோ அசௌகரியங்களையும், அவமானங்களையும் எதிர்நோக்குகின்றனர். சில வளிகேடுகளையும் அந்த சூழல் அமைத்துத் தருகின்றது. இதற்கு சில விபச்சாரங்களும், மதமாற்றங்களுமே சாட்சி. பேரூந்தில் உரசல்கள், காதல்/ காம லீலைகளையும் அந்த சூழல் ஏற்படுத்தி கொடுக்கிறது. சில இஸ்லாத்துக்கு எதிரான அமைப்புகள் கூட கட்டுக்கோப்பான அழகிய இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கி நம் இஸ்லாமிய பெண்களை வழிகெடுக்கின்றனர். எதற்காக சிறந்த கல்வியை பெறவே இத்தனை போராட்டங்களும்
இவைகளுக்கு ஏன் முடிவு கட்ட முடியாது..?
வெளியூர் தனியார் வகுப்புகளில் உள்ள சிரந்த ஆசிரியர்களை நமதூருக்கு வரவழைத்து கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த அரசியல் அதிகாரிகளால் ஏன் செய்யமுடியாது...?
கிழமையில் ஒருநாள் மட்டும் பொதுமக்களின் குறைகளைக் கேட்டு தீர்வு வழங்காமல் எமது சமுதாயத்தின் குறைகளையும் தீர்க்க இந்த மாநகரசபை முன்வரவேண்டும்.
யார் இவர்கள்...? நம் ராத்தா, தங்கை, மருமகன், மருமகள், காக்கா, தம்பி எல்லோரும் நம் சொந்தங்கள்.
அதிகாரிகளே நீங்கள் யார்...? அதேபோன்று எங்கள் உறவுகள்தான். ஏன் உங்கள் குடும்ப சுக வாழ்வை அலங்கரிக்கும் நீங்கள் சமுகத்தை சீர்படுத்த முடியாது...? நெறிப்படுத்த முடியாது...?
கல்வி கருத்தரங்குகள், உளவியல் கருத்தரங்குகள், இளைஞர்கள் எதிர்நோக்கும் சவால்கள், தொழில் முன்னேற்ற கருத்தரங்குகள், போன்றன இந்த மாநகரசபையினால் செயற்படுத்தப்படல் வேண்டும்.
உதாரணமாக.
Egypt al askar university ல் கல்வி பயின்று இன்று பேராசிரியராக வலம் வரும் #தீன்_முஹம்மத்.
தற்போது கட்டாரில் உள்ள பல்கலைக்கழக விரிவுரையாளராக கடமையாற்றுகிறார். அக்கரைப்பற்று மட்டுமல்ல பல ஊர்களிலும் இவர் வருகையை வெகு விமரிசையாகவே கொண்டாடுகின்றனர். இவர் கற்ற கல்வியை பல நாடுகள் விலை கொடுத்து வாங்கிக்கொண்டு இருந்தாலும் இவர் போன்றவர்கள் நம் நாட்டில் எத்தனைபேர் உள்ளனர்...? அப்படியானவர்களை இனம் கண்டு ஏன் நமது மாணவர்களுக்கு விசேட கருத்தரங்குகள் மூலம் கற்பிக்க முடியாது...?
இவர் போன்றவர்களை ஏன் நம் பிராந்தியத்தில் நம்மால் உருவாக்க முடியாமல் போனது...?
திறமை இருந்தும் விகிதாசார அடிப்படையில் பல்கலைக்கழகம் செல்ல முடியாத மாணவர்களை இவ்வாறான பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி கற்றலை தொடரவைக்க முடியாது...?
உயர்தரம் படித்து முடித்த மாண்வர்கள் என்ன செய்வது..?
சரியான வழிகாட்டல் இல்லாமல் Q's போன்ற கல்விகளைக் கற்று வேலை செய்யும் இளைஞர்களின் எதிர்காலம் என்ன...?
வீதி அமைத்தல், கான் தோண்டுதல், பூமரம் நாட்டுதல் போல ஒவ்வொரு இளைஞர்களுக்கும் சிறந்த வழிகாட்டல் அவசியம் இது மாநகர முதல்வரினதும் ஏனைய அரசியல் தலைவர்களினதும் பொறுப்பு.
இது எங்களுக்கு சம்பந்தம் இல்லை என்றால் உங்கள் உண்மையான கடமை என்ன...?
நமது சமூகத்தில் ஒவ்வொருவரும் நாளாந்தம் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கிறனர். இவர்களின் பிரச்சினைகளை கேட்டு ஆலோசனை வழங்க ஒரு குழு அமைக்கப்பட வேண்டும்.
சிறந்த கல்வித்தகமை உள்ள நமது இளைஞர்கள் எத்தனையோ வெளிநாட்டுகளில் உள்ளனர். இந்த மாநகரசபை திடமாக இருக்குமானால் அத்தனைபேரையுன் அழைத்து ஆலோசனை செய்து அவரவர் முதலீட்டிற்கு ஏற்ப தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்த முடியும்.
விற்பனை, ஏற்றுமதி போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ள முடியும். இது அதிகாரத்தால் இலகுவாக செய்ய முடியும்.
ஒவ்வொரு குழந்தைகளின் தாய் தந்தை போல ஊரைப்பற்றி ஊரின் தலைமை சிந்திக்கவேண்டும்.
எமது சமூகத்தின் எதிர்காலத்தை நாம்தான் வடிவமைக்கவேண்டும். நீங்களாக வெளிவந்து இப்படியான காரியங்களை செய்தால் ஊரின் பல இளைஞர்கள் உங்களுடன் கைகோர்ப்பார்கள், உங்களுடன் ஒன்று சேர்வார்கள்.
#என்ன_செய்கிறீர்கள்...?
வெறும் ஆட்சி அதிகாரங்களுக்குள் கட்டுப்பட்டு வாளாமல். இப்படியான விடையங்களையும் கருத்தில்கொண்டு, நமது இளைஞர்களின் எதிர்காலத்தையும் கருத்தில்கொண்டு சிறந்த வழி நடத்தல்களை மேற்கொள்ளுங்கள். வருமானங்களை ஏற்படுத்திக் கொடுங்கள்.
இப்படி எத்தனையோ திட்டங்கள், வழிகாட்டல்கள் மூலம் நமது ஊரை நாம் மாறியமைக்கலாம். ஆளுமையான தலைவர்களையும், நட் பிரஜைகளையும் உருவாக்கலாம்.
இப்படியான மாற்றங்கள் திகழ வேண்டுமானால்
#படித்துப் பட்டம் பெற்ற அனுபவம் வாய்ந்த கல்விமான்களே மாநகரை ஆளவேண்டும்.
நன்றி....
Gafrufais




No comments:
Post a Comment