மன்னார் தீவுப்பகுதியில் காற்று வலு மின்நிலையம் ஒன்றை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனையிலும் பொலநறுவை மாவட்டத்தில் வெலிக்கந்தையிலும் 2019ஆம் ஆண்டில் சூரியவலு மின்நிலையங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளது. பத்து மெகாவொட் கொள்ளளவுடன் கூடிய சூரியவலு மின்நிலையங்களை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரிப் பிரதேசத்தில் 20 மெகாவொட் சூரியவலு மின் சக்தி நிலையம்ஆரம்பிக்கப்படவுள்ளது.
100 மெகாவொட் சூரியவலு மின்நிலையம் மொனறாகலை மாவட்டத்தின் சியம்பலாண்டு பிரதேசத்தில் தற்போது அமைக்கப்பட்டு வருகின்றது.
2030ஆம்ஆண்டளவில் நிலைபேறான எரிசக்தி மூலம் நாட்டின் மின்சக்தித் தேவையில் 70 சதவீதமான தேவையை நிவர்த்தி செய்வது அரசாங்கத்தின் இலக்காகும்.
No comments:
Post a Comment