தெற்காசியாவில் இலங்கையிலேயே குறைவான தாய் மரண வீதம் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வருடம் இலங்கையில் 112 தாய் மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும், இது தென் ஆசியாவிலேயே மிகவும் குறைவான பதிவு எனவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பிரசவத்தின் போது ஒரு இலட்சம் தாய்மாருக்கு 33.8 வீதம் நேரடி தாய் மரணங்கள் பதிவாகியுள்ளன. கடந்த 7 வருடகாலமாக இலங்கையில் தாய் மரண வீதம் ஒரே மட்டத்திலேயே காணப்பட்டது. எனினும் 2016 ஆம் ஆண்டு தாய் மரண வீதம் 55 வீதமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தகதாகும். இதற்கான பிரதான காரணங்களாக பிரசவத்தின் பின்னரான அதிக இரத்த போக்கு மற்றும் இருதய கோளாரு என கண்டறியப்பட்டுள்ளது. இவை தவிர 43 வீதமான தாய் மரணங்கள் உரிய நேரத்திற்கு மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்
ளாமை காரணமாக இடம்பெற்றுள்ளதோடு, 20 மரணங்கள் வீட்டில் உரிய பராமரிப்பின்மையால் இடம்பெற்றுள்ளது என்றுள்ளது
No comments:
Post a Comment