மல்லாவியில் சேதமடைந்த வீடுகள் புனரமைப்பு - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, 30 December 2017

மல்லாவியில் சேதமடைந்த வீடுகள் புனரமைப்பு

மல்லாவி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசங்களில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக சேதமடைந்த வீடுகள் புனரமைக்க்பபட்டன.மல்லாவியில் சேதமடைந்த வீடுகள் புனரமைப்பு
651 ஆவது படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 15 ஆவது சிங்க படையணியினால் இந்த திருத்த வேலைகள் அண்மையில் மேற்கொள்ளப்பட்டன.

சூறாவளியின் நிமித்தம் 15 ற்கும் மேற்பட்ட வீடுகளின் கூரைகள் சேதமடைந்து 74 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிக்கும் முகமாக 32 இராணுவ படையினரின் பங்கேற்புடன் அவசர தேவைகளின் நிமித்தம் இராணுவத்தினரால் ஓடுகள் மற்றும் தகடுகளை பயன்படுத்தி சேதமடைந்த வீடுகள் திருத்தியமைக்கும் பணிகள் இடம்பெற்றன.

அக்கரயாயன்குளம் – கோணாவில் நீர்ப்பாசன கால்வாயில் இரு பக்கங்களும் 652 ஆவது படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 7 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியினால் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages