இலங்கை கிரிக்கெட் அணியை புதிய மூலோபாயங்கள் மூலம் பயிற்றுவிப்பதற்கு தயாராக இருப்பதாக பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துறுசிங்க தெரிவித்துள்ளார்.
இதன் போது விளையாட்டு வீரர்களின் மன நிலை மற்றும் உடற்பயிற்சிகளை புதிய வழிமுறைகளில் முன்னெடுக்கவும் பயிற்றுவிப்பாளர் எதிர்பார்த்துள்ளார். இவர் தனது பயிற்றுவிப்பு நடவடிக்கையை கொழும்பு, ஆர்.பிரேமதாச விளையாட்டரங்கில் ஆரம்பித்தார்.
முதலாவதாக நான்கு பிரிவுகளின் கீழ் பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் அணி தோல்வியைத் தழுவியமை ஆற்றல் இல்லாமையினால் அல்ல. இவர்களின் ஆற்றலை உரிய முறையில் புரிந்துகொள்ளாமையே காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.




No comments:
Post a Comment