நிலக்கண்ணிகளை அப்புறப்படுத்தும் திட்டத்தில் சர்வதேச சமூகத்துடன் இலங்கை - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, 15 December 2017

நிலக்கண்ணிகளை அப்புறப்படுத்தும் திட்டத்தில் சர்வதேச சமூகத்துடன் இலங்கை

நிலக்கண்ணிகளை அப்புறப்படுத்தும் திட்டத்தில் சர்வதேச சமூகத்துடன் இலங்கை இணைவு
நிலக்கண்ணிகளை அப்புறப்படுத்தும் திட்டத்தில் சர்வதேச சமூகத்துடன் இணைந்து கொண்டுள்ளது.
  
நிலக்கண்ணிகளை அப்புறப்படுத்தும் திட்டத்தில் சர்வதேச சமூகத்துடன் இணைந்து கொள்ளப் போவதாக இலங்கை கடந்த ஆண்டு உறுதியளித்திருந்தது. இந்த உறுதிமொழி தற்போது  நிறைவேற்றப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
  
மிதிவெடிகளை பயன்படுத்துவதையும், களஞ்சியப்படுத்தி வைப்பதையும், தயாரிப்பது  , மாற்றுவதையும் தடை செய்கின்ற சமவாயத்தில் இணைவது தொடர்பான ஆவணத்தை ஐக்கிய நாடுகளுக்கான நிரந்தர வதிவடப் பிரதிநிதி ரொஹான் பெரேரா கையளித்ததாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
 
 பொதுவாக 'ஒட்டாவா உடன்படிக்கை' என்றழைக்கப்படும் மிதிவெடிகளைத் தடை செய்வதற்கான ஆவணம் 1997ம் ஆண்டு செப்ரெம்பர 18ம்திகதி நோர்வேயின் தலைநகர் 'ஒஸ்லோவில்' நடைபெற்ற சர்வதேச மாநாடொன்றில் அங்கீகரிக்கப்பட்டது. இந்த உடன்படிக்கை 1999ம் ஆண்டு மார்ச் 1ம் திகதி அமுலுக்கு வந்துள்ளமை குறிப்pபடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages