எதிர்காலத்தில் பாரியளவிலான முதலீட்டு வலயங்கள் நிறுவப்படும். கண்டி, பிங்கிரிய,மாவத்தகம, களுத்துறை, காலி,ஹம்பாந்தோட்டை, மொனராகல ஆகிய மாவட்டங்களில் முதலீட்டு வலயங்கள் அமைக்கப்பட்விருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பியகம முதலீட்டு வலயத்தில் அமைந்துள்ள 'தோமஸ் டிலாரு' நிறுவனத்திற்கு நேற்று விஜயம் செய்த போதே இவ்வாறு தெரிவித்தார்.
புதிய வெளிநாட்டு முதலீடுகளை கவர்ந்திழுத்து,தற்போதைய வர்த்தக போட்டித் தன்மையை சமாளிக்கக்கூடிய வகையில் சந்தையை கட்டமைத்து, உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதம சுட்டிக்காட்டினார்.
அடுத்துவரும் ஆண்டுகளில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை வலுப்படுத்துவது அரசாங்கத்தின் நோக்கமாகும். எதிர்காலத்தில் பாரியளவிலான முதலீட்டு வலயங்கள் நிறுவப்படும். இதன் மூலம் பிரதேச அபிவிருத்திக்கு இலக்கு வைக்கப்படுவதாக பிரதமர் கூறினார்.
இலங்கைக்குத் தேவையான நாணய நோட்டுக்களில் 25 சதவீதமான நோட்டுக்கள் இங்கு அச்சிடப்படுகின்றன. எதிர்காலத்தில் 75 சதவீத நோட்டுக்களை அச்சிட உள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். அடுத்து வரும் சில மாதங்களில் இலங்கையின் புதிய கடவுச் சீட்டையும் இந்த நிறுவனம் அச்சிட உள்ளது. வெளிநாட்டுக் கடவுச் சீட்டுக்களை அச்சிடும் பணிகள் டிலாரு நிறுவனத்திற்கு கிடைக்கலாமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டார்.




No comments:
Post a Comment