லங்கா சதொச நிறுவனம் அத்தியாவசிய பொருள்கள் பலவற்றின் விலையை குறைத்துள்ளது.
உற்சவ காலத்தில் மக்களுக்கு நிவாரணத்தை வழங்குவதற்காக இந்த விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலுமுள்ள 372 சதொச நிறுவனங்களில் எந்த தட்டுப்பாடுமின்றி அத்தியாவசிய உணவுப் பொருட்களை குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள முடியம் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஒரு கிலோ 65 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட வெள்ளைப் பச்சை அரிசிஇ 62 ரூபாயாகவும்இ 74 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நாட்டரிசி 70 ரூபாயாகவும் தற்போது விலை குறைக்கப்பட்டுள்ளது.
பொன்னி அரிசி ஒரு கிலோ 78 ரூபாவில் இருந்து 71 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
சீனி ஒரு கிலோ 107 ரூபாயில் இருந்து 100 ரூபாவாகவும்இ பெரிய வெங்காயம் ஒரு கிலோ 152 ரூபாயில் இருந்து 135 ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது.
425 கிறாம் எடைகொண்ட ரின்மீன் 149 ரூபாயில் இருந்து 127 ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது.
சிவப்பரிசி கிலோ 73 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிநது.
பாஸ்மதி அரிசி ஒரு கிலோவை 132 ரூபாவிற்கும் விற்பனை செய்கிறது. வெள்ளைப் பூடு கிலோ ஒன்று 250 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.




No comments:
Post a Comment