தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று காலை 9.15 மணிக்கு தேசிய பாதுகாப்பு தின நிகழ்வானது, அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வேண்டுகோளுக்கமைய நாடளாவிய ரீதியில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது காலை 9.27க்கு தேசியக் கொடியேற்றி, இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு, மதத் தலைவர்களது ஆசியுரைகள் நடைபெற்றது.
தேசிய பாதுகாப்பு தினத்தின் முக்கியத்துவம் குறித்து அரசாங்க அதிபரும் இதன்போது உரை நிகழ்த்தினார்.
டிசம்பர் 26 ஆம் திகதியை தேசிய பாதுகாப்பு தினமென 2006 ஆண்டில் அமைச்சரவை பிரகடனப்படுத்தியதைத் தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு தினம் முதன் முதலில் கண்டியில் கொண்டாடப்பட்டது.
தேசிய பாதுகாப்பு தின நினைவு நிகழ்வுகளில் பலதரப்பட்ட இயல்புகள் இருந்தபோதும், அனர்த்தங்கள் பற்றிய விழிப்பூட்டல் மற்றும் அதன் அபாயத்தை தவிர்க்கும் முறைகளில் நிறுவனங்களின் பங்களிப்பும் அது பற்றி சமூகங்களுக்கு உணர்த்துவதும் ஆகிய இரு முக்கிய குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்டதாகவே அமைகின்றது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந்த், உதவி மாவட்டச் செயலாளர் ஏ.நவேஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா, மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப்பணிப்பாளர் முகமட் றியாஸ், திணைக்களத் தலைவர்கள், உத்தியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment