கிழக்கு மாகாணத்தில் வெலிகந்த மற்றும் வாகரை பகுதியிலுள்ள மல்வில, சந்துன்பிடிய மற்றும் நாமல்கம ஆகிய கிராமங்களில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் தெரிவுசெய்யப்பட்ட பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
கிழக்குமாகாண இலங்கை இராணுவத்தினர் அண்மையில் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் குறித்த பகுதியை சேர்ந்த 150 பாடசாலை மாணவர்களுக்கு பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டது. இதற்கான நிதி நன்கொடையினை மக்கள் வங்கியின் பௌத்தசங்கம் வழங்கியுள்ளது.
இப்பகுதியில் குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களின் பிள்ளைகள் பொருளாதார பிரச்சினை காரணமாக பாடசாலைக்கு செல்லாமையினால், அவ்வாறான பிள்ளைகளை படையினர் இனம்கண்டு அவர்களுக்கு இவ்வாறான உதவிகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த நிகழ்வில், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், நன்கொடையாளர் நிறுவனம் பிரதிநிதிகள் மற்றும் பிரதேசவாசிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment