இளைஞர் சமூகத்தை விவசாயத்துறையில் ஈர்ப்பதற்காக நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் புதிய நடைமுறைகளை பயன்படுத்தும் மாதிரி கிராமங்கள் பல நாட்டில் அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்மூலம் 6ஆயிரத்து 500 இளைஞர் யுவதிகளுக்கு விவசாயத்தொழிற்துறை தொடர்பான அறிவைப்பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
உற்பத்தி தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் சேதனைப்பசளை பயன்படுத்தி விவசாயத்துறையுடன் தொடர்புபட்ட 15ஆயிரம் விவசாயிகளை தெரிவுசெய்து அவர்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
இவர்களினால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சர்வதேச சந்தைக்கு சமர்ப்பிப்பதற்கான சான்றிதழ் வழங்குவதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment