நாட்டின் சப்ரகமுவ மாகாணம் மற்றும் காலி ,மாத்தறை, களுத்துறை மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஊவா மாகாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில இடங்களில் ஓரளவு மழை பெய்யும். ஊவா மாகாணம் கொழும்பு கம்பஹா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் 40 கிலோமீற்றருக்கு அதிகமான காற்று வீசக்கூடும்.
மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்கரையோர பிரதேசங்களில் ஓரளவு மழைபெய்யும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். இடிமின்னலிலிருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
No comments:
Post a Comment