முக்கிய வழக்குகளை மூத்த நீதிபதிகளுக்கே ஒதுக்க வேண்டும்: தலைமை நீதிபதிக்கு முன்னாள் நீதிபதிகள் கடிதம் - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, 14 January 2018

முக்கிய வழக்குகளை மூத்த நீதிபதிகளுக்கே ஒதுக்க வேண்டும்: தலைமை நீதிபதிக்கு முன்னாள் நீதிபதிகள் கடிதம்

புதிய விதிமுறைகளை வகுக்கப்படும் வரை முக்கிய வழக்குகளை மூத்த நீதிபதிகளுக்கே ஒதுக்க வேண்டும் என தலைமை நீதிபதிக்கு சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் முன்னாள் நீதிபதிகள் கடிதம் எழுதியுள்ளனர்.
Image result for indian court

புதுடெல்லி:

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் நேற்று முன்தினம் திடீரென போர்க்கொடி உயர்த்தினர். வழக்குகளை ஒதுக்குவதில் தலைமை நீதிபதி பாரபட்சம் காட்டுவதாக அவர்கள் செய்தியாளர்களிடம் கூட்டாக தெரிவித்தனர்.

சுப்ரீம் கோர்ட்டு வரலாற்றிலேயே முதல் முறையாக நிகழ்ந்துள்ள இந்த நீதிபதிகளின் மோதல் போக்கு, நாடு முழுவதும் மிகப்பெரும் அதிர்வலைகளை கிளப்பி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகள் கவலையை வெளியிட்டு வருகின்றன. மேலும், அங்கு நடைபெறும் நிகழ்வுகளை மத்திய அரசும் உன்னிப்பாக கவனித்து வருகிறது.

இதற்கிடையில், நீதிபதிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள பிளவை சமரசமாக முடித்து வைப்பதற்காக, இந்திய பார் கவுன்சில் களம் இறங்கியுள்ளது. அதிருப்திக்குள்ளாகியுள்ள நீதிபதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த 7 உறுப்பினர்கள் கொண்ட குழுவை இந்திய பார் கவுன்சில் அமைத்திருந்தது.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் முன்னாள் நீதிபதிகளான சாவந்த், சந்துரு, ஏபி ஷா, சுரேஷ் ஆகியோர் தலைமை நீதிபதி தீபக் மிஷ்ராவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், புதிய விதிமுறைகள் வகுக்கும் வரை முக்கிய வழக்குகளை மூத்த நீதிபதிகள் அமர்வுக்கு வழங்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages