தைத்திருநாளில் அனைவரது வாழ்க்கையிலும் எல்லா நலன்களும் கிட்ட வேண்டும் - ஜனாதிபதி - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, 14 January 2018

தைத்திருநாளில் அனைவரது வாழ்க்கையிலும் எல்லா நலன்களும் கிட்ட வேண்டும் - ஜனாதிபதி

Related image
தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் கொண்டாடப்படும் தைத்திருநாள் அனைவரது வாழ்க்கையிலும் வளம், நலம், செழிப்பு, மகிழ்ச்சி உள்ளிட்ட எல்லா நலன்களும் கிட்ட வேண்டும் .
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தைத்திருநாளை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச்செய்தி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
 
 
ஜனாதிபதி  தைத்திருநாளை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச்செய்தி பின்வருமாறு:
உலகவாழ் தமிழ் மக்களால் இயற்கைக்கு தமது நன்றியைப் பறைசாற்றும் வகையில் அனுஷ;டிக்கப்படும் தைத்திருநாளை முன்னிட்டு இந்த வாழ்த்துச்செய்தியை அனுப்பி வைப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
 
மானிட சமூகத்தினை நாகரிகத்தை நோக்கிப் பயணிக்க வைப்பதில் உழவுத் தொழிலே முக்கிய காரணியாக அமைந்தது. நவீன கைத்தொழில் மயமாக்கத்தினதும் தொழில்நுட்ப வளர்ச்சியினதும் ஈர்ப்பினால் கிராமவாசிகள் விவசாயத்தைக் கைவிட்டு, நகரங்களை நோக்கி படையெடுக்கும்; நிலையிலும் பண்டைய பாரம்பரியங்களுடன் கொண்டாடப்படும் இத்தகைய பண்டிகைகள் மனிதனின் கலாசாரம், பண்பாடு, மனிதநேயம், ஒற்றுமை, பகிர்ந்துண்ணல் மற்றும் உயிர்களிடத்தில் அன்பு செலுத்துதல் போன்ற விழுமியப்பண்புகளை சமூகத்தில் பேண உதவுவதுடன் அவற்றை எதிர்கால தலைமுறையினரை நல்வழிப்படுத்தும் வகையில் பாதுகாப்பதற்கும் வாய்ப்பாக அமைகின்றன.
 
அத்தோடு உழவுக்குப் பெருமை சேர்க்கும் தைத்திருநாளானது, உணவு உற்பத்தியைப் பெருக்கி, அதில் தன்னிறைவைப் பெறவேண்டும் என்ற அரசாங்கத்தின் முயற்சிக்கும் வலு சேர்ப்பதாகவே அமைகிறது.
 
தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் கொண்டாடப்படும் தைத்திருநாள் அனைவரது வாழ்க்கையிலும் வளம், நலம், செழிப்பு, மகிழ்ச்சி உள்ளிட்ட எல்லா நலன்களும் கிட்ட வேண்டும் என்ற பிரார்த்தனையுடன், தைத்திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது மனங்கனிந்த இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages