புதுடில்லி:'பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளில், ரயில்வே மூத்த அதிகாரிகள், இரு வாரங்களுக்கு, இரு நாட்கள் வீதம் முகாமிட்டு, பணிகளை மேற்பார்வையிட வேண்டும்' என, ரயில்வே உத்தரவிட்டு உள்ளது.
அடுத்த நிதியாண்டில், 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், பழைய மற்றும் பழுதான வழித்தடங்களை மாற்ற, ரயில்வே திட்டமிட்டு உள்ளது. இந்நிலையில், கட்டுமானப் பிரிவு அதிகாரிகளுக்கு, ரயில்வே வாரியம் அனுப்பிய கடிதம்:
சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மண்டலங்களில் நடக்கும், தண்டவாளம் புதுப்பித்தல், பால சீரமைப்பு, ஆளில்லா லெவல் கிராசிங்குகளை நீக்குதல், நடைமேடைகளை உயர்த்துதல் மற்றும் வழித்தட பராமரிப்பு பணிகளை தொடர்ந்து கண்காணித்து, தேவையான பரிந்துரைகளை அளிக்க வேண்டும்.
தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மண்டலங்களில், துவக்கத்தில் ஒரு வாரமும், அதன்பின், 14 நாட்களுக்கு இரு நாட்கள் வீதமும், அதிகாரிகள் தங்கியிருந்து, அங்கு நடக்கும் திட்டப் பணிகளுக்கு தேவையான வழிமுறைகளை கூறி, செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment