நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பங்களாதேஷ் கடலோர பாதுகாப்பு கடற்படை கப்பல்கள் வெற்றிகரமாக தமது விஜயத்தை நிறைவுசெய்து நாட்டைவிட்டு புறப்பட்டுள்ளது.
நாட்டைவிட்டு புறப்பட்ட பங்களாதேஷ் கடற்படையின் மன்சூர் அலி மற்றும் கமருசமன் என்னும் இரு கப்பல்களையும் இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி அனுப்பிவைத்தனர்.
கடந்த 16 ஆம் திகதி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த கப்பல்களின் பணியாளர்கள் இலங்கையில் நங்கூரமிட்டிருந்த காலத்தில் பல நிகழ்வுகளிலும், இலங்கை கடற்படையினர் ஏற்பாடு செய்துள்ள நட்பு கைப்பந்து போட்டிகளிலும் பங்கேற்றனர்.




No comments:
Post a Comment