நாட்டின் வடக்கு , வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்றும் நாளையும் மழை அதிகரிக்ககூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு கிழக்கு பருவப்பெயர்ச்சி காலநிலை நிலைபெறக்கூடும். வடக்கு வடமத்திய கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை , ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் ஓரளவு மழைபெய்யும்.
பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை நாட்டின் சில பகுதிகளில் பெய்யும்.
வடக்கு , கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் 75 மில்லிமீற்றருக்கு அதிகமான மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்றுவீசக்கூடும். இடிமின்னலிலிருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.




No comments:
Post a Comment