நாளைய சுதந்திர தேசத்தை நாமே கட்டி எழுப்புவோம்.
எக்கால கட்டத்திலும், எவ்வேளையிலும், தேச நலனுக்காகவும், சமூக மேம்பாட்டிற்காகவும், தன்னை அர்ப்பணித்து.
சமூக நலனிலும், பொதுச் சேவையிலும் முனைந்து செயற்படுவதுடன், ஜனநாயகம் நிறைந்ததும், வன்முறைகள் அற்றதுமான ஒரு தேசத்தையும், ஒரு இளைஞர் சமூகத்தையும் தோற்றுவிப்பதற்கு தன்னாலான முழுப் பங்களிப்புகளையும், அரும் பெரும் தொண்டுகளையும் வழங்குவதுடன். மனசாட்சி, சட்டம், நியாயம், சத்தியம் என்பவற்றிற்கும் கட்டுப்பட்டு இணக்கப்பாடுகளுடன் செயற்படும்.
எக்காலகட்டத்திலும் எவ்வேளையிலும், சுயநலம், பேராசைகள் இல்லாமல் அனைவரையும் ( சமத்துவ, சகோதரத்துவ ) கண்ணோட்டத்தில் உற்று நோக்கி "இனவாதமும், பிரதேச வாதமும் களைந்து யாவருக்கும் புகலிடம் எனும் கருப்பொருளை கையாளுவதுடன்.
நீதியாகவும், நேர்மையாகவும், அர்ப்பணிப்புடனும் தனது பணிகளை திறம்படச் செய்யும்.



No comments:
Post a Comment