ஞானமாக நினைத்து பயன்படுத்தப்படும் டிஜிட்டல் தொழில்நுட்பம். - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, 9 December 2017

ஞானமாக நினைத்து பயன்படுத்தப்படும் டிஜிட்டல் தொழில்நுட்பம்.

ஞானமாக நினைத்து பயன்படுத்தப்படும் டிஜிட்டல் தொழில்நுட்பம்


வயதல்லையையும் தாண்டி இன்று சிறியவர் முதியவர் இளசுகள் என்று எல்லோருமே பயன்படுத்தும் ஒன்றுதான் இந்த டிஜிட்டல் தொழில்நுட்பம். தகவல் தெரிந்து கொள்ளவும், அனுப்புவதற்கும் பயன்படுத்தப்படும் எலக்ட்ரானிக் கருவிகளைத்தான் "டிஜிட்டல் தொழில்நுட்பம்" என்று இந்த கட்டுரையில் பார்ப்போம். 
ஈ-மெயில், மெசேஜ் அனுப்ப, கோல் செய்ய, கேம்ஸ் விளையாட, போட்டோ/வீடியோ பார்க்க போன்ற பல செயற்பாடுகளுக்காக இந்த சாதனம் பயன்படுத்த படுகிறது. அதேபோல தொடர்புகளுக்கும், பொழுதுபோக்குக்கும் இது அவசியமாகிறது.

சிலர் எப்பவுமே இணைபிரியாத நண்பனைப் போல செல்போன்களை வைத்திருப்பதும், சிக்னல் கிடைக்காத இடத்தில் தற்செயலாக இருக்கும்போது பைத்தியம் பிடித்தவர் போல முட்டாள் தனமாக நடந்து கொள்வதையும்  பார்க்கமுடியும். ராத்திரி நேரங்களில் சரியாக தூங்காமல் அடிக்கடி போனைப் பார்ப்பார்கள் ஏதாவது மெஸ்ஸேஜ் வந்திருக்கிறதா என்று. இப்படிப்பட்டவர்களால் கம்பியூட்டர், செல்போன் இல்லாமல் இருக்கவே முடியாது. அப்படி நடந்தால் உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் பாதிப்பிற்குள்ளாகலாம் (withdrawal symptoms) இவர்கள் நிலை கவலைக்குரியது இண்டர்நெட், ஸ்மார்ட்போன், போன்ற டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு அடிமையாகியிருக்கிறார்கள்.

ஆராய்ச்சியாளர்கள் கூட இது அடிமைத்தனம் என்றும், சிலர் சரியாக பயன்படுத்தாமல் விட்டால் பிரச்சினைகள் வரும் என்றும் கூறுகின்றனர். யார் என்ன கூறினாலும் நம் பயன்பாட்டின் விளைவுகளை நாம் சுவைத்தே ஆகவேண்டும். 

"டிஜிட்டல் டிடாக்ஸ்"
சீனா, தென் கொரியா, பிரிட்டன், ஐக்கிய மாகாணங்கள் போன்ற நாடுகளில் "டிஜிட்டல் டிடாக்ஸ்" (digital detox) மையங்கள் இருக்கின்றன. தொழில்நுட்பத்தில் மூழ்கிப்போய் இருப்பவர்களுக்கு உதவி செய்யவே இந்த மையங்கள் செயற்படுகிறது. இந்த மையத்தில் சேரும் இருவரை பல நாட்களுக்கு இண்டநெட் அல்லது எலக்ட்ரான் சாதனங்கள் பாவிக்க விடமாட்டார்கள். ப்ரெட் என்ற ஒருவர் நாள் ஒன்றிற்கு 16 மணி நேரம் இண்டர்நெட் கேம்ஸ் விளையாடுவார். அப்போதல்லாம் தான் போதைக்கு அடிமையானவர் போல இருப்பதாக தோனும் என்று அவரே சொல்கிறார். கடைசியாக அவர் டிஜிட்டல் டிடாக்ஸ் மையத்திற்கு போனார் அப்போது அவர் மோசமான நிலையில் இருந்தார். தன்னுடைய வேலை மற்றும் நண்பர்களையும் இழந்து இருந்தார். அதையும் தாண்டி தன்னை தானே சுத்தமாக வைத்திருக்க அவரால் முடியவில்லை. இந்த நிலை உங்களுக்கும் ஏற்படாமல் இருக்க என்ன செய்யலாம்...? 

எலக்ட்ரானிக் கருவிகளை எந்த அளவு பயன் படுத்துகிறீர்கள் என்று யோசித்துப் பாருங்கள்.

தொழில்நுட்பம் உங்கள் வாழ்க்கையை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது.. ? அடிக்கடி இந்தக் கேள்வியை உங்களுக்குள்ளேயே கேட்டுக்கொள்ளுங்கள்:

  • இண்டர்நெடையோ மற்ற எலக்ட்ரானிக் சாதனங்களையோ பயன்படுத்த முடியாமல் போகும்போது நான் கோபப்படுகிறேனா...? ஒருவேளை அந்தக் கோபம் தலைக்கேறுகிறதா...?

  • ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் இண்டர்நெட்டை அல்லது எலக்ட்ரானிக் கருவிகளை பயன்படுத்தக் கூடாது என்று நான் தீர்மானித்திருந்தும் அந்த நேரத்துக்கு மேல் அதை பயன்படுத்திக்கொண்டே இருக்கிறேனா...?

  • மெசேஜ் வந்திருக்கிறதா என்று பார்ப்பதற்காக நான் தூக்கத்தை தொலைக்கிறேனா...?

  • எலக்ட்ரானிக் சாதனங்களை பாவிப்பதே கதி என்று இருக்கிறேனா...? அல்லது குடும்பத்தாரோடு அதிக நேரம் செலவிடுகிறேனா...? இந்த கேள்விக்கு நான் சொல்லும் பதிலை என் குடும்பத்தார் ஏற்றுக்கொள்வார்களா...?

தொழில்நுட்பத்தை அதிகமாக பயன்படுத்துவதனால் 'மிக முக்கியமான' காரியங்களை நீங்கள் அசட்டை செய்கிறீர்களா...? அதாவது குடும்பத்தையும், மற்ற பொறுப்புகளையும் சரியாக கவனித்துக்கொள்ள முடியாமல் இருக்கிறீர்களா...? அப்படியானால் இப்பவே உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். எப்படி...? 

எவ்வளவு நேரம் பயன்படுத்த வேண்டும் என்று திட்டமிடுங்கள்.

"அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" அதனால் நீங்கள் வேலைக்காகவோ, பொழுதுபோக்குக்காகவோ தொழினுட்பத்தை பயன்படுத்தும் போது எவ்வளவு நேரம் பயன்படுத்தவேண்டும் என்று முன்பே தீர்மானம் செய்துகொள்ளுங்கள். தீர்மானித்த நேரத்துக்கு மேல் பயன்படுத்தாதீர்கள்.

டிப்ஸ்....
தொழில்நுட்பத்தை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தாமல் குடும்பத்தில் இருக்கும் ஒருவருடைய உதவியை நாடுங்கள். "ஒண்டியாய் இருப்பதிலும் ஒருவர் கூட இருப்பது நலம்.

இப்போதல்லாம் எந்தவொரு தகவலையும் எளிதில் தெரிந்துகொள்ள முடியும். எதையும் சுலபமாக அனுப்பவும் முடியும் அதனால் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்த நிறைய வாய்ப்புகள் உண்டு. அளவுக்கு அதிகமாக பயன்படுத்தி அடிமையாகாமல் கவனமாக பயன்படுத்துங்கள். அப்படிச் செய்தால் உங்கள் பொன்னான நேரத்தை நன்றாக பயன்படுத்துவீர்கள்..

ஆசிரியர் ( GAF )

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages